ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
தமிழ் நாட்டின் புரட்சிகர தொழிலாளர் கட்சி அரசியலிலும் மனித நேய செயற்பாடுகளிலும் கணிசமான சேவைகளை செய்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் மிகவும் பின் தங்கிய மக்களின் அன்றாட தேவைகளுக்காக குரல் எழுப்புவதுடன் இன ரீதியாக, சாதி ரிதியாக அல்லது வறுமை காரணமாக பிரச்சினைகளை எதிர் நோக்கும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் PTP கட்சியினர் பாரிய அர்ப்பணிப்புகளை செய்து வருகின்றனர்.
அத்துடன் எதிர் காலத்தில் உலமா கட்சி ஊடாக இலங்கை தமிழ் உறவுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இவர்கள் முன் வந்துள்ளனர். இது பற்றிய அவர்களது விருப்பம் அண்மையில் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதிடம் கட்சியின் மாநில செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. ஏகாம்பரம் அவர்களால் முன் வைக்கப்பட்டது.
Comments
Post a comment