Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

தேசியப் பட்டியலுக்கு ஆலாய் பறக்கும் அரசியல் ஜாம்பவான்கள்!

-மருதூர் சுபைர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிபுத்தளத்தின் மூத்த அரசியல்வாதி நவவியின் இராஜினாமாவை அடுத்து காலியாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் அடிப்படையில்ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வினால் பெற்றுக்கொள்ளப்பட்டதே இந்தத் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் வன்னிதிருமலைமட்டக்களப்புகுருநாகல்புத்தளம்அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் போட்டியிட்டது. எனினும்சுமார் 33000 வாக்குகளை மாத்திரமே பெற்றுஒருசில ஆயிரம் வாக்குகளினால் ஆசனத்தை இழந்தது. வன்னிதிருமலைமட்டக்களப்பு,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஐக்கிய தேசியக் கட்சியுடனான புரிந்துணர்வின் அடிப்படையில்பெற்ற தேசியப் பட்டியலுடன் ஐந்து ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கின்றது.
கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் புத்தளம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் வாக்குகளினால் வெற்றிபெற முடியாமல் போன நவவிக்கு வழங்கப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதற்கே கட்சி முடிவு செய்திருந்தது. அந்தவகையில்நவவி எம்.பி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் பாரம்பரியக் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக மக்கள் காங்கிரஸ் போட்டியிட்ட போதும்அக்கட்சிக்கு 33000வாக்குகள் கிடைத்தமைஅம்பாறை மாவட்ட அரசியலில் ஒரு திருப்பமாகக் கருதப்படுகின்றது.
யானையிலும்மரத்திலும் பழக்கப்பட்டிருந்த கைகள் மயிலுக்கு புள்ளடி போட்டன. கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்சமூகத்தின்பால் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் அவர் துணிச்சலாக சமூகப் பிர்ச்சினைகளுக்காக குரல்கொடுக்கும் பாங்கு உட்படஏனைய சில கட்சியின் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளே இந்த வாக்குகளைப் பெறுவதற்கு காரணமாக இருந்தமைஅந்த நேரத்தில் அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸோமயில் சின்னமோ அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கமும் செலுத்தாத போதும்,ரிஷாட் என்ற தனிமனித ஆளுமையே இத்தனை ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி குறுகிய காலத்துக்குள் அள்ளுவதற்கு காரணமாய் அமைந்ததென்று அரசியல் எதிரிகள் கூட மூக்கில் விரல் வைத்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்தும் அதிருப்தியுற்று அரசியல் நடத்தியவர்கள் போட்டியிட்டனர். கல்விமான்கள் முழுநேர அரசியல்வாதிகள் ஆகியோரும் இந்த வேட்பாளர் பட்டியலில் அடங்குவர்.
அமைச்சர் ரிஷாத்தின் அலை அம்பாறை மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இருந்தமையும்இந்த வேட்பாளர்களின் தனிப்பட்ட ஆதரவும் இந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரித்துத் தந்தது.
முதன்முதலாக போட்டியிட்ட கட்சி இத்தனை வாக்குகளைப் பெற்றதனாலேயே,அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் கொடுக்க வேண்டும் என்ற ஒருவகையான பிரமை அந்த மாவட்டத்தில் உருவாகிஅது படிப்படியாக வலுவடைந்தது.
தேர்தல் காலத்தில் கட்சியின் தலைவர்அமைச்சர் ரிஷாட் பதியிதீனும் தேசியப் பட்டியலின் ஊடாக அம்பாறை மாவட்டத்துக்கு பிரதிநிதிதத்துவம் வழங்குவதாக அவ்வப்போது சிலாகித்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது காலியாகியுள்ள இந்த எம்.பி பதவிக்கு அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் உள்ள அரசியல் கனவான்கள் ஆலாய் பறக்கின்றனர். தமது ஆதரவாளர்களையும்தமக்குச் சார்பான இணையத்தளங்களையும்,முகநூல்களையும் பயன்படுத்தி “தாம்தான் இந்தப் பதவிக்கு அருகாதையானவர்” எனப் பல கோணங்களிலும் அறிக்கை விடுகின்றனர்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தந்திகளையும். மகஜர்களையும் தமது ஆதரவாளர்களின் ஊடாக வழங்கி வருகின்றனர். அத்துடன்தமது ஆதரவாளர்களை திரட்டிமக்கள் காங்கிரஸ் தலைவரிடம் தூதனுப்பி வருக்கின்றனர்.
இதேவேளைஇந்த அரசியல் கனவான்கள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர்இந்த மாவட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் தமது மனச்சாட்சியைத் தொட்டுக்கேட்க வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழான கைத்தொழில்வர்த்தக அமைச்சின் நிறுவனங்களின் மூலம் இவர்கள் பெற்றுக்கொண்ட பதவிகளால் அந்த மக்களுக்கு ஏதாவது நன்மை பெற்றுக் கொடுத்திருக்கின்றனராஅல்லது அந்தப் பதவியை தமது சுகபோகங்களுக்காக பயன்படுத்தினராஎன்பதை மக்கள் மன்றில் இவர்கள் இப்போது கூறத் தயாரா?
பொதுத்தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கட்சியை அம்பாறை மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதற்கு இவர்கள் ஏதாவது திட்டங்களை வகுத்து செயற்படுத்தினார்களாஇளைஞர்களை கட்சியின்பால் திருப்பினார்களா?
சரிஅதுதான் போகட்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமூகத்துக்காக குரல் கொடுப்பதனால் வில்பத்து என்றும் முல்லைத்தீவு என்றும் இனவாதிகள் அவர் மீது அபாண்டங்களை பரப்பியபோதுஅம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் ஜாம்பவான்கள் தாம்தான் என இப்போது தலைநீட்டி இருக்கும் இந்த முக்கியஸ்தர்கள்அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு வெகுஜனப் போராட்டம் ஏதாவது நடாத்தியிருக்கின்றார்களா?இல்லையேல் ஒரு அறிக்கை தானும் விட்டிருக்கின்றார்களாஇந்த வினாக்களை மக்கள் மன்றத்துக்கு விடுகின்றோம்.
இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் மக்கள் காங்கிரஸின் அடிமட்டப் போராளி என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியே ஆக வேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எமக்குத் தந்த வாக்கை நிறைவேற்றுவார். இந்தப் பதவியை இந்தப் பிரதேசத்துக்கு வழங்கினாலேயே எதிர்காலத்தில் கட்சியை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும். அதுமாத்திரமின்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவை எமக்குத் தேவை. ஆனால் இந்தப் பதவியை யாருக்கு வழங்குவதுஎன்பதிலேதான் கட்சித் தலைமை தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலமே எமது வெற்றி தங்கியுள்ளது”

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313