වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
‘மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்த சமூகம்,ஆதரிக்கத்
தொடங்கியுள்ளது’
அக்குரனை, பானகமுவையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு-
வன்னியில்ஆரம்பகாலங்களில்மக்கள்காங்கிரஸின்அரசியல்நடவடிக்கைகளுக்குஎதிர்ப்பைத்தெரிவித்ததமிழ்ச்சமூகம்,
தற்போதுபடிப்படியாகஎமதுகட்சியினைஆதரிக்கத்தலைப்பட்டதனாலேயே,அந்தப்பிரதேசத்தில்தமிழர்கள்பெரும்பான்மையாகவாழும்இரண்டுபிரதேசசபைகளின்அதிகாரங்கள்எமதுகைக்குக்கிடைத்தமைக்குகாரணமாகும்என்றுஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின்
நிதியொதுக்கீட்டில்,அக்குரனை, க/பானகமுவைமுஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாகநிர்மாணிக்கப்பட்டுள்ள
பாடசாலைக்கட்டிடத் திறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு உரையாற்றும்
போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன, மத பேதமின்றி நேர்மையுடனும்
உண்மையுடனும் நாங்கள் பணியாற்றியதன் பிரதிபலிப்பே, தமிழர்கள் எம்மை அரவணைத்தமைக்கு
காரணமாக அமைகின்றது. இந்தக் கட்சியை வன்னியில் அறிமுகம் செய்வதற்கும், வேரூன்றச்செய்வதற்கும்
நாங்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. வீதிகளிலே
கொடும்பாவியைக்கட்டி எரித்ததுன்பியல் வரலாறுகளும் எமக்குண்டு. எனினும், நாங்கள்
பரிதவித்துக்கொண்டிருந்ததமிழ் சமூகத்துக்குமேற்கொண்ட பணிகளினாலேயே, அந்தச்
சமுதாயத்திலிருந்து இரண்டுதவிசாளர்களைப் பெறமுடிந்தது.
“நாம் நியாயத்துக்காக குரல்
கொடுக்கின்றோம்.
எம்மைஅடிமைகளாகக்கருதிஅடக்கப்பார்ப்பவர்களுக்குஎதிராககுரல்கொடுக்கின்றோம். அநீதிகளைத்தட்டிக்கேட்கின்றோம்.
இதனாலேயே நாங்கள் செய்யாத விடயங்களுக்கு எம்மை வலிந்திழுத்து வசைபாடுகின்றனர்.
குற்றஞ்சாட்டுகின்றனர்”
இதனாலேயே,கண்டியில் நாம் காலூன்ற வந்த
போது,“இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்ய வேண்டாம்” என்று என்னிடம் சிலர்
வேண்டினர்.விவாதித்தனர். என்னைக் கண்டால் சிங்கள மக்கள் துவேச உணர்வுடன்
பார்ப்பதாகவும், இனவாதியெனக் கருதுவதாகவும்,என்னைசிங்கள சமூகத்தின் விரோதியாக
அவர்கள் எண்ணுவதாகவும் சிலர் கூறினர்.
எனினும், எனக்கு நெருக்கமானவர்கள் “இவற்றை
அலட்டிக்கொள்ள வேண்டாம். நேர்மையான முறையில் நாம் பணியாற்றுவோம்” என்று கூறினர்.
இந்த வகையில், கண்டியில் எமது கட்சி காலூன்றுவதில் முனைப்புடன் செயற்பட்ட காலஞ்சென்ற
பொறியியலாளர் கஸ்ஸாலி மற்றும் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட இன்னும்
பலரை நான் நினைத்துப் பார்க்கின்றேன். அது மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் காதர்
ஹாஜியாரின் மருமகனும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அம்ஜாத் அவர்கள், இந்தப்
பிரதேசத்தின் கட்சிப் பணிகளை தலைமையேற்றிருப்பதுஎமக்கு வலுவூட்டுகின்றது.
முஸ்லிம்கள் பொதுவாக பச்சை நிறத்திலேயே
ஊறிப்போனவர்கள் என்ற யதார்த்தம் இருக்கின்றது.வாக்குச் சீட்டில் யானையைக் கண்டால்
நமது கைகள் நமக்குத் தெரியாமலேயே அதை நாடுகின்ற நிலைமை கடந்த காலங்களில் இருந்தது.
நமது சமூகத்தில் அரசியல் அறியாமையும்,
அரசியல் விழிப்புணர்வு இன்மையுமே இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு காரணமாகும். இதனாலேயே
நாம் பல்வேறு வழிகளில் பின்னடைவைச் சந்திக்கின்றோம். நமது சமூகம் நாடளாவிய
ரீதியில் தொடர்ந்தேர்ச்சையாக எதிர்கொள்கின்ற துன்பங்களுக்கும், துயரங்களுக்கும்
முடிவு கட்டுவதற்கு நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.இவ்வாறான
சமூகத்திலிருந்து எழுச்சி பெற்றதே மக்கள் காங்கிரஸ். இந்தக் கட்சி உண்மையையும்
தெளிவையும் எடுத்துச் சொல்லி வருகின்றது. மக்களுக்கு அரசியல் ரீதியான விழிப்பைக்
கொடுத்து வருகின்றது.
துன்பங்கள்தான் வாழ்க்கையாக மாறியிருக்கின்ற
நமது சமூகத்துக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்கவே கட்சி அமைத்தோம். அந்த நோக்கத்தை
சரிவர நிறைவேற்றி வருகின்றோம் என்ற மனத்திருப்தி எமக்குண்டு. அத்துடன்,குறிப்பாக
வடக்கில் பிரிந்து கிடந்த தமிழ், முஸ்லிம் உறவை சீராக்கி பலப்படுத்தும்
முயற்சிகளில் நாம் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர்
எஸ்.சுபைர்தீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் அம்ஜாத் ஹாஜியார், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின்
முக்கியஸ்தரான உதுமான் ஹாஜியார் ஆகியோரும் உரையாற்றினர்.
Comments
Post a comment