சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்:


சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு!

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

“திகன அசம்பாவிதங்களின் போது, அங்கு அமைதியை ஏற்படுத்த செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நான் என்பதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு நான் விசாரணைக்கு செல்லும் முன்னர், அமைச்சர் ஹக்கீம் தனது பெயரை எனது வாக்குமூலத்தில் குறிப்பிடுமாறு கூறினார். தேவை ஏற்பட்டால் நான் எவ்வளவு தூரம் அவர்களுக்கு உதவி செய்தேன் என்பதை தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு தெளிவுபடுத்துவடுத்துவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதனையும் நான் எனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளேன்.

பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்துவதற்கு, சீருடை அணிந்த பொலிஸார் திறந்து கொடுத்தார்கள். கலகத்தை அடக்க செயற்பட்ட எம்மீது பழி போடும் போது இவற்றை கூறாமல் இருக்க முடியாது” என்றார்.(புதிது)

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்