கல்லொழுவை பைத்துல் ஸக்காத் குழு ஸக்காத் நிதி சேகரிப்பு
( மினுவாங்கொடை நிருபர் )
புனித ரமழான் மாதத்தில் விநியோகிப்பதற்காக, மினுவாங்கொடை - கல்லொழுவை, ஜும்ஆப் பள்ளிவாசல் பைத்துல் ஸகாத் குழுவினர், வழமைபோல் இவ்வருடமும் ஸக்காத் நிதி சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சுய தொழில்களைப் புரிந்து வருபவர்களின் தொழில் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுவதே, இந்த ஸக்காத் நிதி சேகரிக்கப்படுவதன் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து வாழும் வறிய குடும்பங்கள் மற்றும் கணவரை இழந்து வாழும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கும், சேகரிக்கப்படும் இந்த ஸக்காத் நிதியிலிருந்து ஒரு தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த ஸக்காத் நிதி, புனித ரமழானில் சேகரிக்கப்பட்டு, வெகு விரைவில் விநியோகம் செய்யப்படுமென, கல்லொழுவை பைத்துல் ஸக்காத் குழு செயலாளர் தெரிவித்துள்ளார். ஸக்காத் நிதி சேகரிப்புக்காக வரும் ஸக்காத் குழு உறுப்பினர்களிடம் வசதியுள்ளவர்கள் ஸக்காத் நிதிகளை வழங்கி, புனித ரமழானில் அல்லாஹ்விடம் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும், செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்ட…