ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியை, ராஜிநாமா செய்கிறார் கபீர் ஹாசிம்!அமைச்சர் கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் செயலாளர் பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிணங்க, தனது பதவி விலகல் கடிதத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்க, அவரின் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கடந்த மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்தமையினை அடுத்து, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.புதிது

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.