நீர்கொழும்பு, மினுவாங்கொடை நகரங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு( மினுவாங்கொடை நிருபர் ) 

   பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை நகரங்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் நன்மை கருதி, குறித்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
   இதேவேளை, ஆடை அணிகள், உணவுப் பொருட்கள் என்பனவற்றை வாங்க வரும் பொதுமக்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைத்தொகுதிகள் மற்றும் சன நெறிசல் மிக்க இடங்களில் தம்வசம் வைத்திருக்கும் பணப்பைகளையும், இதர பொருட்களையும் இயன்றளவு முடிச்சு மாறிகளிடமிருந்தும், கள்வர்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுரை பகர்ந்துள்ளனர்.
   நீர்கொழும்பு பொலிஸ் தலைமையக பிரதான பரிசோதகர் உதய குமார வூட்லரின் தலைமையில் நீர்கொழும்பு நகர எல்லையிலும், மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜீவக்க ராஜபக்ஷ் தலைமையில் மினுவாங்கொடை நகர எல்லையிலும் விசேட பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களும், ரோந்து நடவடிக்கைக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்