அன்று உலமா கட்சித்தலைவர் சொன்னதை இன்று பேராசிரியர்கள் ஏற்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-

இஸ்லாம் என்பது இலங்கைக்கு வந்த மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பது இலங்கை மண்ணுக்குச் சொந்த மார்க்கம். நமது தகப்பன் ஆதி பிதா ஆதம் அலைசலாம் அவர்களுடைய தமிழுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்; இந்த மண்ணுக்குச் சொந்தக்கார்கள் நாங்கள்; நம்மிடத்திலிருந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டார்கள் என தமிழ் நாடு தென்னிந்திய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் சே.மு.மு.முகமதலி தெரிவித்தார்.

சித்திலெப்பை ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்திருந்த 'முஸ்லிம் தேசியம்' -எழுச்சி மாநாடு 2018 கடந்த சனிக்கிழமை(31-03-2018)காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் மண்டபத்தில் நடைபெற்றது இங்கு பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் சே.மு.மு.முகமதலி இவ்வாறு தெரிவித்தார். சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேராசிரியர் சே.மு.மு.முகமதலி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- முஸ்லிம் தேசிம் எழுச்சி மாநாடு எங்கே நடாத்தப்படுகிறது யாரால் நடாத்தப்படுகிறது ஏன் நடாத்தப்படுகிறது என்று என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன்.எங்கே நடாத்தப்படுகிறது என்கிற போது நம்முடைய சிந்;தனைகள் பழைய வரலாற்றை தொடாமல் இருகக் முடியாது.

இந்தியாவும்,இலங்கையும் ஒன்றாக இணைந்திருந்த காலம் உண்டு வரலாற்றிலே இந்தியா வேறு இலங்கை வேறு என்று பிரிக்க முடியாதபடி இணைந்திருந்த சூழல் உண்டு இரண்டுக்கும் மத்தியிலே சின்னஞ்சிறு ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதுதான் பகுரிலி ஆறு அப்போது லெமூரியா கண்டம் என்று அழைக்கபட்டு இந்தப் பகுதி செரன்டிப்; என்று காணப்பட்டது.

அப்படி பண்மலை அடிக்கட்டும் பகுரிலி ஆறும்,கொடுங்கடல் கொள்வதற்கு முன்பே இருந்தப் பகுதியிலேதான் ஆதி பிதா ஆதம் அலைசலாம் அவர்கள் இறக்கப்பட்டார்கள் விண்ணில் இருந்து அவர்கள் இறக்கபட்ட பகுதி எங்கே அன்ரைக்கு இலங்கையும்,இந்தியாவும் இணைந்திருந்த செரன்டிப் பகுதியிலே இன்றைக்கு இலங்கைப் பகுதியிலே அதனாலேதான் நாம் நெஞ்சு நிமிர்த்திக் சொல்லிக் கொண்டிருக்கின்றேம் இலங்கைக்கும் சரி இந்தியாவுக்கும் சரி இஸ்லாம் வந்த மார்க்கம் அல்ல சொந்த மார்க்கம் இஸ்லாம் என்பது இலங்கை மண்ணுக்குச் சொந்த மார்க்கம்.

அது மட்டுமல்ல அதற்குப் பின்னர் அப்போதே உருவானதுதான் நம்முடைய அறபு மண்ணுக்குமான இலங்கை இந்தியாவுக்குமான தொடர்பு இன்னும் சொல்லப்போனால் முதன்முதலா ஹிஜ்ரத் செய்தது ஆதம் அலைசலாம் அவர்கள் தான் முதன் முதலாக ஹஜ்சுப் பயணம் மேற்கொண்டவர் யார்ரென்று நாம் நுனுகிப்பார்ப்பொமேயானால் ஆதம் அலைசலாம் அவர்களிடத்தில் வந்து நிற்கலாம்.அப்படிப்பட்டவர் பிறந்த மண் இந்த மண்.அவர் என்ன மொழி பேசியிருப்பார் என்று ஆராச்சி செய்தால் பல வல்லுணர்கள் சொல்லுகிறார்கள் அவர் பேசி மொழி தமிழாக இருந்திருக்க வேண்டுமென்று.

அப்படியென்றால் முஸ்லிம்களாகிய நமக்கு தகப்பன் மொழி தமிழ் ஜித்தாவிலே இறக்கப்ட்ட அவ்வா அலைசலாம் பேசியது அறபு மொழியென்றால் நமது தாய் மொழி அறபு தாய்மொழி அறபாக இருந்தாலும் கூட தந்தை மொழி எதுவோ அதுதானே நமது தாய் மொழி அதில்தானே நமக்கு உரிமை இருக்கிறது பாரதி பாடுவானே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று தந்தையர் நாடென்ற பேச்சினிலே தாய்நாடென்ற பேச்சினிலே என்று பாரதி பாடவில்லை.காரணம் என்ன தந்தையிடத்தில்தான் உரிமையுண்டு.

எங்கள் ஊரிலே சாலையின் நடுவே நாம் பயணப்பட்டுப் போகின்ற போது கறுக்கெ யாராகிலும் வந்து விட்டால் என்ன நினைத்துக் கொண்டு பேகிறாய்; உன் அப்பன் வீட்டு ரோடா என்று கேட்போம் உங்க அம்ம வீட்டு ரோடா என்று கேட்பதில்லை தந்தை என்பதில் உரிமை இருக்கின்றது.நம்ம அப்பன் வீட்டுச் சொத்தைத்தான் பலபேர் கொள்ளையடித்து விட்டார்கள்.நமது தகப்பன் ஆதி பிதா ஆதம் அலைசலாம் அவர்களுடைய தமிழுக்குச் சொந்தக்காரர்கள் நாம் இந்த மண்ணுக் குச் சொந்தக்கார்கள் நாம் நம்மிடத்திலிருந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டார்கள்.
அறபு மண்ணுக்கும்.இலங்கை மண்ணுக்குமான இந்தத் தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அப்பாற்பட்டது சுமாத்திராத் தீவுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் இலங்கைக் கடலிலே கப்பல்களை நிறுத்தி வைத்துவிட்டு ஓய்வெடுத்த பின்னர்தான் புறப்படுவார்கள் அப்படி ஒரு நிலை.அப்படி வந்த வணிகர்கள்தான் இந்த மண்ணுக்கு,இந்தியாவிற்கு,அரபியர்கள் அந்தக்காலத்தில் யெவனர் என்றும் சோனகர் என்றும் வந்தவர்கள்தான்.

வந்து வணிகம் செய்தவர்கள்தான் ஆனால் வணிகர்களாக வந்த முஸ்லிம்கள் எல்லாம் எந்த நாட்டுக்கு வந்தார்களோ அந்த நாட்டுக்கு விசுவாசமாகத்தான் இருந்தார்கள்.காரணம் நாட்டுப் பற்று என்பது ஈமானில் ஒரு பகுதி ஆகவே எந்த நாட்டுக்கு வணிகம் செய்ய வந்தார்களோ அந்த நாட்டுக்கு விசுவாசமாகவே இருந்தார்கள்.அந்த நாட்டை வளப்படுத்தினார்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேன்மைப் படுத்தினார்கள்.

போர்த்துக் கேசியர்களைப் போலவோ அல்லது தட்சுக்காரர்களைப்போலவோ அல்லது பிரித்தானியர்களைப் போவோ இந்த நாட்டை தங்கள் நாட்டுக்கு அடமானம் வைத்து அடிமைப்படுத்தவில்லை.இந்த நாட்டை ஆக்கரமிப்புச் செய்யவில்லை எண்ணிப்பாருங்கள் வணிகத்திற்காக வந்த எந்த முஸ்லிமாவது இந்த நாட்டை ஆக்கிரமித்ததுண்டா என்னுடைய நாட்டுக்குத்தான் இந்த நாடு சொந்தம் என்று சொன்னதுண்டா ?

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவையோ.இலங்கையையோ ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அந்தந்த நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார்கள் அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை, தொழிலை,வளத்தை சிறப்பித்தார்கள் அப்படித்தான் வரலாறு உண்டே தவிர ஆக்கிரமித்தாகவோ ஆளுமைக்குள்ளாக்கியதாகவோ தங்களுடைய சொந்த நாட்டுக்கு அடிமைப்படுத்தியதாகவோ எந்த வரலாறும் இல்லை.அதைப்போலதான் சவுதிஅரேபியாவின் தெற்கே இருக்கிற ஒரு பகுதி ககுதான்குடி அங்கு வாழ்ந்த அராபியர்கள்தான் இந்த நாட்டுக்கு வணிகத்திற்காக வந்த குடியேறினார்கள்.
இந்த ஊருக்கு குடிபெயர்ந்தார்கள் ககுதான்குடி அந்த ககுதான்குடி அராபியர்கள் இங்கு வாழ்ந்த மக்களோ பழகி அவர்களோடு இணைந்து இங்குள்ள பெண்களை மணமுடித்து இந்த நாட்டுக்கெ உரிய மக்களாக இருந்து இந்த நாட்டின் வளத்தையும்,செளுமையையும் காத்து வந்தனால் ககுதான்குடி காத்தான்குடியாயிற்று அப்படி வந்ததுதான் இந்தக் காத்தான்குடி இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த ஊரிலேதான் இந்த மாநாடு நடக்கிறது.

காத்தான்; குடியிலே மிகச்சிறப்பு என்னவென்றால் அறிஞர் பெருமக்கள் ஆயிரக்கணக்கில் இருந்த இருக்கின்ற ஊர் இது.இங்கிருந்து வணிகத்திற்காக போனவர்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றார்கள்.இந்த மண்ணிலே அறபு மொழியிலே வல்லமை பெற்ற அறிஞர்கள் பல பேர் இருந்திருக்கிறார்கள்.இப்றாகிம் ஆலிம்,ஒடக்கரை ஆலிம்,அல்லாமா இஸ்மாயில் ஆலிம்.அறபுக் கவிஞர் அப்தல் கபூர் ஆலிம், இலக்கியத் தாத்தா எம்.எஸ்.எம்.றூக்,மௌலவி ஏ.எல்.எம்.எஹியா, கப்பல் ஆலிம் முகம்மது நூரி,மௌலானா மௌலவி ஏ.ஜி.ஏ.அமீன்.அறபு,தமிழ் இரண்டிலுமே இவர்கள் வல்மை பெற்றவர்கள் அறபு மொழியிலே பல நூல்களை எழுதியவர்கள்.

இவர்கள் அறபு மொழியிலே எழுதிய கவிதைகள் ஈரானிலும்,லிபியாவிலும் வெளிவந்த பத்திரிகைகளிலே முன்பக்கத்திலே வெளிவந்திருக்கிறன அப்படி நிறைய மார்க்க அறிஞர்களை தந்த ஊர்தான் இந்தக் காத்தான்குடி அது மட்டுமல்ல எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் 18ஆம் நுற்றாண்டிலே இசுவா அம்மாலையை தந்த அஹமது குட்டிப் புலவரை மறக்க முடியுமா ? அதற்கு நன்றிக்கடனாகத்தான் நாங்கள் இந்தியாவிலே 1990ஆம் ஆண்டு கிழக்கரையிலே நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 5ஆம் மாநாட்டிலே இசுவா அம்மாலையை பதிப்பித்து வெளியிட்டோம் அது நாங்கள் அஹமது குட்டிப் புலவருக்குச் செய்த மரியாதை.

இஸ்லாத்தையும்,இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தையும் காத்து வருகின்ற காத்தன்குடி.இன்னும் மறக்க முடியாதது 1990 ஆகஸ்ட் 03ஆம் திகதி நமது இதயங்களில் காயத்தை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை மறக்க முடியுமா வன்முறையாளர்களால் கொடுமையான முறையில் 147 பேரை இளந்தோமே மறக்கமுடியுமா 300அதிமானோர் காயப்பட்டார்களே அந்தக் கொடூர சம்பவத்தை மறக்க முடியுமா ஆனாலும் கூட துப்பாக்கித் துறைத்தளம் தூசிக்குச் சமானம் எமது தூய மார்க்கத்திற்கு இல்லாத உயிர் செல்லாக்காசுக்குச் சமானம் என்று சொல்லி அந்தச் சம்பவத்தைக் கூட ஏற்று ஈட்டியின் முனையிலே எங்களை நிறுத்தினாலும்,சைனைட்டே தந்தாலும்.வெடிகுண்டே வைத்தாலும் எங்கள் ஈமானை ஒரு போதும் இழக்கமாட்டோம் என்று சொல்லி ஈமானைக் காத்துவரும் ஊர் இந்தக் காத்தான்குடி எனத்தெரிவித்தார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்