கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பதில் செயலாளராக விளையாட்டு உத்தியோகத்தர்


கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பதில் செயலாளராக விளையாட்டு உத்தியோகத்தர் றிபாஸ் தெரிவு!

எம்.வை.அமீர்-
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பதில்  செயலாளராகவிளையாட்டு உத்தியோகத்தர் .எம்.எம்.றிபாஸ் இன்று இடம்பெற்ற நிறைவேற்றுகுழு கூட்டத்தில் ஏகமனதாகதெரிவுசெய்யப்பட்டுள்ளார். கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்திலே இம்முடிவு எடுக்கப்பட்டது.
மிக நீண்டகாலத்துக்கு பின்னர் முதற்தடவையாக சர்வதேச தரத்திலான ஸாஹிரா ஒலிம்பிக் மற்றும் ஸாஹிரா வால்க்ZAHIRA WALK 2018 ஆகிய நிகழ்வுகள் எதிர்வரும் வாரத்தில் மிகவும் விமர்சையாக கல்லூரியின் மீது அனைவரது கவஈர்ப்பினையும் பெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எமது கல்லூரியில் பிரதான அங்கம் வகிக்கும் அமைப்புகள்குறிப்பாக பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் நேரடியான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக உள்ளது.
ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கம் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அத்துடன் ZAHIRA WALK 2018 நிகழ்வில் ஸாஹிறாவில் கல்வி கற்று நாடளாவிய ரீதியிலிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்துபட்டு வாழும் எமது பழைய மாணவர்களின் பூரண பிரசன்னத்துடன் நடைபெறவேண்டிய ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் ஸாஹிரா ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அந்தவையில் கடந்த வருடம் பழையமாணவர் சங்க பொது கூட்டம் இடம்பெற்று இதுவரை சுமார் ஒருவருடமாகவுள்ள நிலையில் அப்போது தெரிவாகிய செயலாளர் வைத்தியர் ஆரிப் அவர்களின் செயல்பாடுகளும் பங்களிப்புகழும் எதுவுமே இல்லாத காரணத்தினாலும் இதுவரைக்கும் எதுவித கூட்டங்களும் ஆக்கபூர்வமான திட்டங்களும் நடக்காததினாலும்,கல்லூரியின் செயல்பாடுகளுக்கு எதுவித ஒத்துழைப்புகள் இன்மையினாலும் தொடர்ந்தும் பயணிக்க முடியாத சூழ்நிலையினை பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுஉறுப்பினர்கள் அதிருப்தியுற்ற நிலையிலே,ஏகமனதாகபழைய மாணவர் சங்கத்தின் உதவி  செயலாளராக இருந்துவந்தவிளையாட்டு உத்தியோகத்தர்.எம்.எம்.றிபாஸ் பதில் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய செயலாளரின் தெரிவோடு அனைத்து பழைய மாணவர்களும்    கல்லூரிக்கும்அதன் செயல்பாடுகளுக்கும் அதன் எதிர்காலவளர்ச்சிக்கும் பரிபூரண ஒத்துழைப்புவழங்குவார்கள் என எதிர்பார்ப்பதோடுபொறுப்புவாய்ந்த இந்த அமானிதத்தைசரிவர நிறைவேற்றுவதுடன் வினைத்திறனாக பழைய மாணவர் சங்கத்தினை உயிரோட்டமுள்ளதாக மாற்றி குறுகிய காலத்தில் செயல்படவேண்டும் எனவும் ஆலோசனையையும் வாழ்த்தினையும் தெரிவிப்பதாக கல்லூரியின் அதிபர் எம்.எஸ் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.