கல்லொழுவை அல் அமான் மாணவன் ஒன்பது பாடங்களிலும் சித்தி( மினுவாங்கொடை நிருபர் )

மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட மினு/கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.என்.எம். நஜார், அனைத்துப் பாடங்களிலும் "ஏ" தர (9 ஏ)  சித்திகளைப் பெற்று, பாடசாலைக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்துள்ளதாக, பாடசாலை அதிபர் எம்.எச்.எம். காமில் தெரிவித்துள்ளார். 
   எஸ். ஆயிஷா -  8 ஏ, 1 சீ, எப். சஜீஹா - 6 ஏ, 1 பீ, 2 சீ, ரீ. பாத்திமா - 6 ஏ, 1 பீ, 2 சீ, எப். ஸைனப் - 6 ஏ, 1 சீ, 2 எஸ், எம். ரஷீக் - 5 ஏ, 3 பீ, 1 சீ ஆகிய பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இப்பாடசாலையிலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய 56 மாணவர்களில் 46 மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக 82 வீத மாணவர்கள் சித்திபெற்றுள்ள நிலையில், முதற்தடவையாக 9 ஏ சித்திகளைப் பெற்று மாணவரொருவர் வரலாற்றுச் சாதனை பெற்றிருப்பதும் விசேட அம்சமாகும் என்றும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். 
   பரீட்சைக்குத்  தோற்றிய மாணவர்களில், சிங்களம், புவியியல் ஆகியவற்றில் 100 வீதமும், சுகாதாரத்தில் 98 வீதமும், இஸ்லாத்தில் 95 வீதமும், தமிழில் 92 வீதமும், தமிழ் இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் 89 வீதமும், வர்த்தகம் கணக்கியலில் 86 வீதமும், விஞ்ஞானத்தில் 71 வீதமும் சித்திகளைப் பெற்றிருப்பதாகவும் அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.