ந‌ல்லாட்சியின் விளைவு. கொழும்பு கோட்டையில் யாசகர்கள் அதிகரிப்பு( ஐ. ஏ. காதிர் கான் )


   கொழும்பு - கோட்டை பிரதேசம் மற்றும் ரயில்வே நிலையத்தை அண்மித்துள்ள பிரதேசங்களில் யாசகம் கேட்பவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக, கொழும்பைப் பாதுகாக்கும் அமைப்பின் இணைப்புச் செயலாளர் ஷிரோன் பர்னாந்து தெரிவித்துள்ளார்.

   போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் விற்பனை முகவர்களாக பெரும்பாலான யாசகர்கள் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   சில யாசகர்கள், கைக்குழந்தைகளை இரவல் வாங்கி யாசகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இவ்வாறான  யாசகர்கள் இருவர்  கடந்தவாரம் கோட்டைப் பகுதியில் யாசகம் கேட்டுக்கொண்டிருக்கும்போது, கையுமெய்யுமாகப்  பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   இதுதொடர்பில், எமது அமைப்பு பொலிஸ் மா அதிபரினதும், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரதும் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்