பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்

- அமைச்சர்களான பைஸர், கபீர் அமைச்சரவையில் சீற்றம்

( மினுவாங்கொடை நிருபர் )

   கண்டி - திகன வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும், இல்லாதுபோனால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் கூட்டாக இணைந்து குரல் எழுப்பியுள்ளதுடன் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர்.
   அமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றபோதே, அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்வாறு விமர்சித்துள்ளனர்.
அமைச்சர்கள் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது, 
   கண்டி - திகன வன்முறை தொடர்பாக அரசாங்கம் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்தும், திருப்திகரமான பதில்கள் எதுவும் தராதது குறித்தும் எமது கண்டனத்தையும் அதிருப்தியையு ம் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்தவேண்டும். உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் குறைபாடுகள் தொடர்பிலும் விசாரிக்கப்படல் வேண்டும். இல்லையெனின், உச்ச நீதி மன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தெரிவித்தார்.
   இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், வாழ்வாதாரங்கள், கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் ஆகியன பற்றியும் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு முன்னுரிமைகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பிரசாரங்களுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான  அசம்பாவிதங்கள் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப ஏற்படாது என்பதையும் அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தில் உறுதி செய்யவேண்டும் என்றும்,  இதன்போது அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்