இந்தியப்பெண் கட்டுநாயக்கவில் கைது

35 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஸ் உடன் இந்தியப்பெண் கட்டுநாயக்கவில் கைது
( மினுவாங்கொடை நிருபர் )
   ஹஷீஸ் வகையைச் சேர்ந்த எட்டு கிலோ கிராம் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இந்திய நாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் தனது பயணப்பையில் மிகவும் சூட்சுமமான முறையில் 8 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப்பொருளை மறைத்து வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து வந்த விமானமொன்றில் கட்டுநாயக்க வந்திறங்கி, அங்கிருந்து வெளியேறும்போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தப் பெறுமதி 35 இலட்சம் ரூபா எனத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேகத்திற்கிடமான பெண்ணை, 24 ஆம் திகதி வரை சிறையில்  வைக்குமாறு, மினுவாங்கொடை நீதிமன்ற பதில் நீதிவான் அத்துல குணசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்