Skip to main content

கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் ம‌ற்றும் த‌மிழ‌ர் கூட்ட‌ணி வசமாகியது!!!




எம்.வை.அமீர், அஸ்லம் எஸ். மௌலானா-



கல்முனையின் முதல்வரானார் ரக்கீப் பிரதிமுதல்வர் காத்தமுத்து கணேஷ்



அம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு (2) திங்கட்கிழமை பி.ப2.30மணியளவில்  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கான போட்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி அபூபக்கர் முஹம்மட் ரக்கீப் முதல்வராகவும் தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த காத்தமுத்து கணேஷ் பிரதி முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.



இன்றைய முதல்நாள் அமர்வில் சாய்ந்தமருது சார்பில் சுயட்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒன்பது உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினரும் சபைக்கு பிரசன்னாமாக வில்லை.



முதல்வர் தெரிவின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளருக்கு வாக்களித்திருந்த போதிலும் அந்தக்கட்சி சார்பில் பிரதி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட உறுப்பினருக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்குகள் அளிக்கப்படவில்லை. மாறாக தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்டவருக்கே வாக்களித்து தெரிவு செய்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்பட்ட போதிலும் அவர்கள் தெரிவாகவில்லை.



கல்முனை மாநகரசபையானது43வேட்பாளர்களைக்கொண்டது. 40உறுப்பினர்கள்தெரிவாகவேண்டும். அவர்களில் பெண்கள் தொகை 10.



இம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும்2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.



இதில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா)12ஆசனங்கள் சுயேச்சைக்குழு4(சாய்ந்தமருது)9ஆசனங்கள் தமிழரசுக்கட்சி(த.தே.கூ)7ஆசனங்கள் அ.இ.ம.கா5ஆசனங்கள் தமிழர்விடுதலைக்கூட்டணி3ஆசனங்கள் தேசியகாங்கிரஸ்1ஆசனம் நல்லாட்சிக்கான தேசியமுன்னணி 1ஆசனம் ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம் சுயேச்சைக்குழுஇரண்டு 1ஆசனம் சுயேச்சைக்குழுமூன்று  1ஆசனம் என அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…