பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் பங்கேற்பு


( மினுவாங்கொடை நிருபர் )
   இலண்டன் நகரின் பிரிட்டனில் ஏப்ரல் 16 முதல் 20 வரை நடைபெறும் (சோகம்) பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் 53 பொது நலவாய உறுப்பு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதியுடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் இணைந்துள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
   "பொதுவான எதிர்காலத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளிலேயே இம்முறை இலண்டன் மாநகரில் உச்சி மாநாடு இடம்பெறுகிறது.
   பொதுவான விழுமியங்களை மீளுறுதி செய்யவும், தாம் முகங்கொடுக்கும் உலகளாவிய சவால்களைப் பகிர்ந்து கொள்ளவும்,  பொது நலவாய நாடுகளின் அனைத்து குடி மக்களுக்கும்  குறிப்பாக,  இளம் வயதினருக்கு மிகவும் சுபீட்சமான, பாதுகாப்பான, நிலைபேறான மற்றும் நியாயமான எதிர்காலத்தை வழங்குவதை உறுதிப்படுத்துவதும், பொது நலவாயத்தின் பலத்தைக் கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்துவதும் அத்துடன், இளம் வயதினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவற்றை அடையாளப்படுத்துவதற்காகவுமே அரச தலைவர்களும், பிரதிநிதிகளும் அங்கு ஒன்று கூடியுள்ளனர்.
   பொது நலவாய அரச தலைவர்களுக்கான மற்றும் அமைச்சுப் பிரதிநிதிகளுக்கான மாநாட்டில், பொது நலவாயத்திற்கான இலங்கையின் திட உறுதிப்பாட்டை மீள் உறுதி செய்தல், இவ்வமைப்பு மற்றும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுடனுமான இலங்கையின் பங்காண்மையை ஆழமாக்குதல் தொடர்பில் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.