ஹரீஸின் துரோகத்தனமும் ரிஷாதின் சமூக உணர்வும்!!


கல்முனை மேயர், பிரதி மேயர் தெரிவு!
ஹரீஸின் துரோகத்தனமும்
ரிஷாதின் சமூக உணர்வும்!!

(ஏ.எச்.எம்.பூமூதீன்)

கல்முனை மேயர் தெரிவு - சமூகத்தை முன்னிலைப்படுத்தியதாகவும் பிரதி மேயர் தெரிவு அதே சமூகத்தை காட்டிக் கொடுத்தலிணூடாகவும் நேற்று இனிதே நிறைவுபெற்றது.

கல்முனை மேயராக முஸ்லிம் ஒருவரே வரவேண்டும் என்பதிலும் அவர் எந்த அணியை சார்ந்தவராக இருந்தாலும் பிரச்சினை இல்லை என்பதிலும் கல்முனை வாழ் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் உறுதியான நிலைப்பாட்டிலேயே பொதுவாக கானப்பட்டனர்.

10 மு.கா.சார்பான உறுப்பினர்களையும் 2 ஜ.தே.க. உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டிருந்த மு.கா. மேயர் பதவியை அடைந்து கொள்ள துடியாய் துடித்தது.     [ ஜ,தே.க வின் 2 உறுப்பினர்களும் மு.காவுக்கு நிச்சயமற்ற நிலை ஒருபக்கம்]

கல்முனையை இழந்துவீடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கும் பிரதியமைச்சர் ஹரீஸ் - தனது நோக்கம் நிறைவேற எதையும் செய்ய துணிந்த, எவருடனும் பேச்சம் நடத்தக் கூடிய ஹரீஸ் - மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் மருதமுனையில் தெரிவான மு.கா. அல்லாத உறுப்பினர்களுக்கும் தூதுக்கு மேல் தூத அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனோ- சமூகத்திற்கு பாதகமாக எந்த முடிவையும் எடுக்கமாட்டேன் என்ற தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியாக இருக்கும் அதேவேளை கட்சி பிரமுகர்களும் அவரது நிலைப்பாட்டிலேயே உறுதியாகவும் இருந்தனர்.

இந்த நிலையில்தான் பிரதியமைச்சர் ஹரீஸின் தூதுக்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாத்" ஹரீஸையோ, அவரது கட்சியையோ நம்ப முடியாது. பள்ளிவாசல் நிர்வாகம் உலமாக்கள் வேண்டினால் மு.கா.சார்பானவர் மேயராகவர ஆதரவளிக்கலாம் " என்றார்.

இதன் பிற்பாடு, தான் சொன்னால் உடன் செய்யக் கூடிய பள்ளி தலைவரை வைத்துஅமைச்சர் ரிஷாதுடன் பேச்சு நடத்தினார்.

பின்னர் - நிந்தவூரில் வைத்து  அமைச்சர் ரிஷாதை நேரடியாக சந்தித்த பிரதியமைச்சர் ஹரீஸ்-" மச்சான் எப்பிடியாவது இந்த விடயத்தில் உதவி செய். நன்றியோடு இருப்பேன். பிரதி மேயர் பதவியை உனது கட்சிக்கு எடுத்துக்கொள்" என்கிறார்.

" உன்னை நம்பலாமா மச்சான்" என அமைச்சர் திருப்பிக் கேட்டபோது " அல்லாஹ்வுக்காக என்னை நம்பு " என்கிறார் ஹரீஸ்.

பேச்சுவார்த்தையில் திருப்தியடைந்த ஹரீஸ் சந்தோசத்தின் உச்சத்தில் " இப்போதே பள்ளி தலைமைகளுக்கு அறிவித்து விட்டு உனக்கு அழைப்பை எடுக்கிறேன் என்று கூறிவிட்டு பறந்து போகின்றார்.

2.30 இற்கு சபை கூடவிருந்தவேளை ஹரீஸை சரியாக 1.35இற்கு அமைச்சர் ரிஷாத் தொடர்பு கொண்டபோது இன்னும் அரை மணி நேரத்தில் எடுக்கிறேன் என்று கூறினார். ஆனால் ஹரீஸிடமிருந்து அழைப்பு வரவில்லை. பின்னர் சரியாக அமைச்சர் 2.05 இற்கு அழைப்பை ஏற்படுத்தினார்.ஆனால் அழைப்பை ஹரீஸ் ஏற்கவில்லை.

இந்தவேளை மேயர் தெரிவுக்காக சபை கூடியது. மு.கா.சார்பில் நிறுத்தப்பட்ட மேயர் வேட்பாளருக்கு வாக்களிக்கவா என மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முபீத்- அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்ட போது," ஆம் அவருக்கே வாக்களியுங்கள்..சமுகத்தைப் பாருங்கள் " என கட்டளையிட்டார் அமைச்சர் ரிஷாத்.

வாக்கெடுப்பின் போது மு.கா உறுப்பினர்களின் முகம் வாடி வதங்கிப்போய் இருந்தது .காரணம் , யார் யார் வாக்களிப்பர், வாக்களிக்காமல் விடுவர் என்ற பயம்.

அப்போதுதான், முபீத் எழுந்து நின்று - றக்கீபுக்கு ஆதரவு என்றபோதுதான் மு.கா உறுப்பினர்களின் முகத்தில் வெளிச்சம் உருவெடுக்கின்றது. சட்டத்தரணி றக்கீபின் கண்களில் நீர் முட்டுகின்றது.
அதன்பின் சமூக உணர்வுடன் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்ததன் பின்னர் உதய சூரியன் உறுப்பினர்களும்றக்கீபுக்கு வாக்களிக்க முனைந்த போதுதான் எங்கோ வில்லங்கம் நடந்துள்ளது மெல்ல கசிய தொடங்கியது.

றக்கீப் மேயராக அறிவிக்கப்பட்ட பின்னர்-பிரதி மேயர் தெரிவுக்காக தமிழ் கூட்டமைப்பு மற்றும் உதய சூரியன் சார்பாக பெயர்கள் முன்மொழியப்பட்டபோது சமூக நோக்கம் மற்றும் ஹரீஸின் உறுதி மொழி என்பவற்றை அடிப்படையாக வைத்து முபீத்தின் பெயரை சு.கா.உறுப்பினர் ஜ.பி.ரஹ்மான் முன்மொழிந்தார்.
[காத்தமுத்து கனேஷை முன்மொழிந்தவர் மு.கா.வின் உமர் அலி].

இதனால் ஆத்திரமடைந்த ஜ.பி.ரஹ்மான்-
 தொலைபேசியில் நீண்ட நேரம் யாரிடமோ வாதாடிவிட்டு போனை மேசையில் எறிந்துவிட்டு சட்டன சபையை விட்டு வெளியேறினார். மேயர் இருக்கைக்கு பின்னால் உள்ள மறைவுக்குள் சென்ற அவர் சட்டன திரும்பி வந்து மீண்டும் போனில் நீண்ட ஒரு உரையாடலில் இருந்தார். (சபை முடியும் வரை கோபமாகவே காணப்பட்டார்.)

 தான் முன்மொழிந்த முபீத்- பிரதிமேயருக்கு சகல வழிகளிழும் தகுதியானவர் என்பதை இறுதிவரை உறுதியாக இருந்தார். மு.கா அவரை ஆதரிக்க முன்வராமல் விட பிரதிமேயர் தமிழர் வசமானது. முஸ்லீம் சகோ.ஒருவனை வெட்டி அரசியல் செய்த மு.காங்கிரசின் செயலில் ip ரஹ்மான் கடும் விசனமாக இருந்தார்.

மருதமுனையைச் சேர்ந்த ம,கா. உறுப்பினர் வை.கே.ரஹ்மான் உடனே மேயர் றக்கீபிடம் சென்று" என்ன இது, ஹரீஸ் ஏன் இப்படி ஒரு துரோகத்தை சமூகத்திற்கும் நற்பிட்டிமுனைக்கும் எங்கள் தலைவருக்கும் செய்கிறார்" என்று வாதாடினார்.

அதனையடுத்து சபைக்கு வருகைதந்திருந்த பிரதியமைச்சரை அணுகிய மேயர் உட்பட மு.கா உறுப்பினர்கள், முபீத்தை ஆதரிப்போமா என வினவியபோது- " முடியாது..காத்தமுத்துக்கு வாக்களியுங்கள்" ஒத்த முடிவை அறிவிக்க காத்தமுத்துவுக்கு ஆதரவளித்து படு பாதகத்தை சமூகத்திற்கு இழைத்தனர்.

இதுதான் மேயர் தெரிவிலும் பிரதி மேயர்தெரிவிலும் நடந்த உண்மை சம்பவம்.

சமூகம் -சமூகத்திற்கு துரோகம் இழைக்காதீர் என்று கத்திகத்தி பிரசாரம் செய்து வாக்குச் சூரையாடிய மு.கா. இறுதியில் சமூகத்தை குழிதோண்டி புதைத்து விட்டது.

இரு தமிழர்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பிரதி மேயருக்காக போட்டியிடுகின்றானே அவனுக்கு வாக்களிப்போம் என்ற உணர்வு கூட இல்லாத மு.காவின் கல்முனை மாநகர அதிகாரம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதனையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

திகன, அம்பாரை சம்பவங்களினால் முஸ்லிம்கள் மத்தியில் ஹீரோவாக உலா வந்த பிரதீயமைச்சர் ஹரீஸ் இன்று காத்தமுத்துவால் ஸீரோவாகிப்போனார்.

ஆனால் - அன்றும் இன்றும் என்றும் அமைச்சர் ரிஷாத் ஹீரோதான்.இன்ஷா அல்லாஹ்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்