ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ளதுடன், தமக்கான கௌரவத்தையும் அளித்துள்ளது

அரசாங்கம் தம்மை பற்றி சிந்திக்காது செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கின்றபோது தமக்கு அரசாங்க தரப்பில் இருந்து அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ளதுடன், தமக்கான கௌரவத்தையும் அளித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சித்துவருவதாக தொண்டர்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரவுப் ஹக்கீம்,

இதன் காரணமாக எதிர்காலத்தில் தொலைநோக்கின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.