இன்று முதல் கொழும்பு மா நகர சபை கணினி மயமாகிறது



( மினுவாங்கொடை நிருபர் )  

   உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மா நகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும், இன்று (02) திங்கட்கிழமை  முதல் நவீன முறையில் கணினி மயப்படுத்தப்படவுள்ளது.
   இதன்பிரகாரம், மா நகர சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, நிதிப் பிரிவு ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 
   மக்களுக்கு அதி விரைவான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்