துரோகம் செய்த கட்சி ACMC யா? அல்லது SLMC யா?!!...


கல்முனை மாநகர பிரதி மேயர் தெரிவின் போது சமூகத்தை காட்டி கொடுத்து துரோகம் செய்த கட்சி ACMC யா? அல்லது SLMC யா?!!...
...........................................................
கிழக் இலங்கையில் முஸ்லிம்களின் முக வெற்றிலையாக காணப்படும் கல்முனை தொகுதியில் கல்முனை மாநகர சபை ஆட்சியை கைப்பற்றி தமது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் கட்சி தலைவர்களின் தேவையாக இருந்தது ஆனால் இதற்கு சவலாக இருந்த விடயம் சாய்ந்தமருது மக்களின் ஆதரவும் அந்த மக்களின் நீண்ட கால தேவையான தனி உள்ளூராட்சி சபை கோரிக்கையும் ஆகும்.
                                     இந்த அடிப்படையில் முதலில் ஆட்சி அமைதற்கு SLMC தலைவர் ஹக்கீம் மருதூர் சுயற்சை குழுவின் ஆதரவை கேட்டு அழைப்பு விடுத்தார் ஆனால் ஹக்கீம் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் மருதூர் மக்கள் ஹக்கீமின் அழைப்பை நிராகரித்தது. இதன் பிறகு
தே. கா. தலைவர் அதாவுல்லா SLFPயுடன்  இனைந்து மருதூர் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆசாத் சாலி மூலம் முயற்சித்தார், இறுதியாக ACMC யின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தமது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்தார் ஏன் என்றால் நடைப்பெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மருதூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பெயரில் தனது ACMC கட்சி வேற்பாளர்களை தேர்தலில் நிறுத்தாமை, மற்றும் மருதூர் தனி சபை பெறுவதற்காக நேரடியாகவும்,மறைமுகமாக பல உதவிகளை செய்தவர் என்ற அடிப்படையில் மருதூர் தோடம்பழ சுயற்சை குழுவை தமது கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கும் படி அழைப்பு விடுத்தார் ஆனால்  மருதூர் சுயற்சை குழுவின் ஒரு சில சுய நல அரசியல் இலாபம் கொண்ட உறுப்பினர்களை தவிர ஏனைய மருதூர் பெரும்பாளான மக்களினால்
தோப்பு கண்டத்தில் வழங்கப்பட்ட அழுத்தம் காரணம்மாக, பள்ளி நிர்வாகம் மருதூர்க்கான தனி சபை கிடைக்கும் வரை எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்குவதில்லை என்றும் சபை அமர்வை புறகணித்து தனித்துவம் பேணுவது என்று திடீர் முடிவு செய்தது இந்த முடிவினால் Acmc ஆட்சி அமைக்கும் முயற்சியில் தளர்வு ஏற்பட்டது இதன் பின்னர் அமைச்சர் றிஷாட் ஒரு முடிவுக்கு வந்தார் தனது இலட்சிமும் என்னமும்மாகிய தானும் தனது கட்சியும் தோல்வி அடைந்தாலும் முஸ்லிம் சமூகமும் கல்முனை தொகுதி முஸ்லிங்களும் தோல்வி அடைந்து விட கூடாது என்பதற்காக தனது அரசியல் எதிரியாக SLMC இருந்தாலும் சமூகதிற்காக மு.கா ஆட்சி அமைப்பதற்கு முழு ஆதரவையும் எந்த வித ஒப்பந்தங்கள், நிபந்தனைகள்,சலுகைகள், சுய இலாபங்களை எதிர்பார்காமல் Sடmcயின் மேயர் உறுப்பினர்க்கு முஸ்லிம்களின் முகவெற்றிலை முஸ்லிம்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரு காரணதிற்காக தனது முழு ஆதரவையும் அமைச்சர் றிஷாட் வழங்கினார்.
                        ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக மு.கா வின் ஹக்கீம், ஹரீஸ் எம்பியும் நினைத்தார்கள் சமூகம் எக் கேடுகெட்டு போனாலும் பிரச்சினை இல்லை தனது அரசியல் எதிரியான அமைச்சர் றிஷாட்டை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் செயற்பட்டனர்.

மு.கா வின் ஹக்கீம், ஹரீஸ் எம்பி ஆகியோர் சமூகத்தை காட்டி கொடுத்து செய்த துரோங்கள் ஆதாரத்துடன்
...........................
** மேயர் தெரிவின் பின்னர் பிரதி மேயர் தெரிவில் மு.கா உறுபினர்கள் முபீத்தை தெரிவு செய்வோம்மா என்று ஹரீஸ் எம்பி யிடம் ஆலோசனை கேட்டபோது எக்காரணம் கொன்டும் முபீத்யை தெரிவு செய்ய கூடாது காக்கமுத்து கணேஸ்யை தெரிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தி சமூகத்தை காட்டி கொடுத்தார் ஹரீஸ் எம்பி

** மருதமுனை ஹெலிகப்டர்
நவாஸ் முபீதிற்கு ஆதரவு வழங்குவோம் என்று ஹரீஸ் எம்பியிடம் சென்னபோது அவரின்
என்னங்களை திசை திருப்பி ஹரீஸ் எம்பி தன்னுடைய சொந்த அரசியல் இலாபதிற்காக  காக்கமுத்து கணேஸ்யை தெரிவு செய்ய கட்டாய படுத்தினார்(இதற்கான ஆதாரம் நவாஸ் சின் ஒலிநாடாப் பதிவில் உள்ளது ஆதாரம் இனைக்கப் பட்டுள்ளது) https://youtu.be/ieI0GRUyeAk

* * ஏற்கனவே ஹக்கீம், ஹரீஸ் ம் பாசிகுடா விடுதியில் உதய சூரியனுடன் காக்கமுத்து கணேஸ்சை தெரிவு செய்வதற்கான ஒப்பந்தங்களை செய்து விட்டு அமைச்சர் றிஷாட்டை நிந்தவூரில் ஹரீஸ் எம்பி சந்தித்து பொய் வாகுறுதியை வழங்கி நடித்தது இதற்கான ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது (https://youtu.be/mRHz6_-CcDs)

                      அனைத்து விடயங்களையும் ஒப்பீட்டு ரீதியில் ஆராய்ந்து பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் தமிழர்களிடம் இருந்து கல்முனையை பாதுகாக்க போகிறேன் என்று சொன்ன ஹரீஸ் இன்று சுயநல
அரசியலுக்காக பிரதி மேயராக தமிழரைத் தெரிவு செய்து சமூக துரோகம் செய்துள்ளார் மேலும் இன்று கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று நிரூபிக்கப் பட்டுள்ள இந்த சூழ் நிலையில் கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனை தமிழர்களிடம் ஆட்சி போய் விடும் என்று சொன்ன ஹரீஸ் எம்பி காக்கமுத்து கணேஸ்யை பிரதி மேயராக இன்று தெரிவு செய்து ஒரு தமிழரிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளார் இதில் இருந்து ஹரீஸ் எம்பியின் சில விடயங்கள் தெளிவாக விளங்குகிறது
✓ கல்முனையை தமிழர்களிடம் இருந்து பாதுகாக்கப் போரன் என்று சொல்லிக் கொண்டு கல்முனை குடி ,சாய்ந்தமருது மக்கள் இடையே ஹரீஸ் எம்பி பிரதேசவாத வார்த்தைகளை விதைத்து இரண்டு ஊர்கள் இடையே ஒற்றுமையை சீர் குழைத்து பிரிவினையை ஏற்படுத்தி தனது அரசியல் இருப்பிடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும் என்ற
கோஸ்ஸத்துடன் மருதூர் மக்களின் தனி சபை கோரிககைக்கு தொடர்ந்து தடையாக இருப்பது

✓ சமூகம் முக்கியம் அல்ல தனது அரசியல் இருப்பிடம் தான் முக்கியம் என்று நினைத்து நற்பிட்டிமுனை மக்களை புறக்கனித்து தமிழரைத்  தெரிவு செய்தது
✓ SLMCயை அரசியல் ரீதியாக பழி வாங்க வேண்டும் என்று
Acmc யின் தலைவர் அமைச்சர் றிஷாட் நினைத்திருந்தால் ஹரீஸ் எம்பியின் தீர்மானதிற்கு எதிராக TNAயின் கோடிஸ்வரனை பிரதி மேயர் தெரிவின் போது ஆதரித்து இருந்தால் பிரதி மேயராக கோடிஸ்வரன் தெரிவு செய்யப்பட்டு ஹரீஸ் எம்பி யின் தீர்மானம் காக்கமுத்து கணேஸ் தோல்வியடைந்திருப்பார் ஆனால் அமைச்சர் றிஷாட் சமூகதிற்காக அவ்வாறு செயற்படவில்லை
         Acmc கட்சியும் அதன் தலைவர் அமைச்சர் றிஷாட்டும் கல்முனை பிரதி மேயர் தெரிவின் போது சமூகம் தான் முக்கியம் என்று முடிவு எடுத்துள்ளனர்
ஆனால் SLMC யும் அதன் தலைவர் ஹக்கீமும் சமூகம் முக்கியம் அல்ல தனது கட்சியும் அரசியல் இருப்பிடமும் தான் முக்கியம் என்று முடிவு செய்துள்ளார்கள்
"தெரிப்பது நாங்கள்                                                      
   தீர்மானிப்பது முஸ்லிம் சமூகம்"

ஆக்கம்
மருதூர் ஸக்கி செய்ன்

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்