எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
" திருக்கோணமலை சன்முக வித்தியாலய அபாயா பிரச்சனை சம்மந்தமாக கல்வி அமைச்சரை சந்தித்தார் பிரதி அமைச்சர் ஹரிஸ்" ========================================================================== இன்று ( 27. 04. 2018 ) விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் அவர்களும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை அவருடைய அமைச்சில் சந்தித்து திருகோணமலை சன்முக வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த அநீதி சம்மந்தமாகவும் அவர்கள் அனியும் அபாயா சம்மந்தமாகவும் பேசியதற்கு இணங்க கல்வி அமைச்சர் உடனடியாக குழு ஒன்றை அமைத்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார். அத்துடன் முகத்தை திறந்து அபாயா அனிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஓரிறு வாரங்களில் கல்வி அமைச்சில் இருந்து உத்தியோகபூர்வமாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அபாயா அணிந்ததற்காக தற்காலிக இடமாற்றத்தை தடுக்க முடியாத முஸ்லிம் காங்கிரசின் எம் பீக்களான ஹரீசும் தவ்பீக்கும் கல்வி அ