சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் முதலில்!


முதலில் சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி மன்றம் முதலில்!
-------------------------------------------------------
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (27) இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு  இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று அதன்படி உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன.

ஆனால் சாய்ந்தமருதுவின் எல்லைகள் ஏலவே குறித்தொதுக்கப்பட்டு  இனங்காணப்பட்டுள்ளதால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையே முதலாவதாகவும் விரைவாகவும்   ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பைசர் முஸ்தபாவினால் இற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்