Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்!!



முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் போன்றோரைத் தவிர – வேறு எவரும், ரணில் விக்ரமசிங்கவை நொந்து கொள்ளும் வகையில் வாய் திறக்கவில்லை.

குறிப்பாக, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ‘சீலைக்கு மேலால் சொறியும்’ வகையிலானதாகும். ‘முஸ்லிம்களுக்காக ஆட்சியாளர்களை விமர்சிக்கவும் வேண்டும், அப்படிச் செய்வதால் ஆட்சியாளர்கள் தன்னை நொந்து விடவும் கூடாது’ என்கிற மனநிலையோடுதான், இனவாதத் தாக்குதல்கள் தொடர்பில், ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கள் அமைந்திருந்தன.

#கவனத்துக்குரியவர்கள்

ஆனால், பிரதமரை தைரியமற்ற ஒருவர்  என்றும், அமைச்சர் தயாவின் அழுத்தத்தினாலேயே அவர் அம்பாறைக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்களைக் கண்டுகொள்ளவில்லை எனவும் பிரதியமைச்சர் ஹரீஸ் பகிரங்கமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் ஆற்றிய உரையும் கவனத்துக்குரியதாகும். கண்டி மாவட்டத்தில் இப்படியான ஒரு பிரச்சினை நடைபெறலாம் என்று ஏற்கனவே பிரதமரிடமும், பொலிஸ் அதிகாரிகளிடமும் – தான் தெரிவித்திருந்த போதிலும், அங்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தன்னிடம் கூறி, நம்ப வைத்து – ஏமாற்றி விட்டதாக, நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன் நெற்றிப் பொட்டில் அடித்தால் போல்  தெரிவித்திருந்தார்.

மேலும், முஸ்லிம்கள் மீதான தாக்குதலை முன்னின்று நடத்தியதாகக் கூறப்படும் அமித் வீரசிங்க, மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரர் ஆகியோரை மிகக் கடும் சொற்களால், தனது நாடாளுமன்ற உரையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#ஆச்சரியம்

இன்னொருபுறம், பொளத்த பீடங்களைச் சேர்ந்த  – மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசி, முஸ்லிம்கள் குறித்து அவர்கள் கொண்டுள்ள தவறான கற்பிதங்களைக் களைய வேண்டிய கடமையும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

ஆனால், ரஊப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் – சிங்கள மொழியில் நல்ல புலமை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும், இதுவரை அதனை செய்யவில்லை. பௌத்த மகாநாயக்கர்களைச் சந்திக்கும் போதெல்லாம் – கூனிக்குறுகி கும்பிட்டு, அவர்கள் கூறுகின்றதை மட்டும் கேட்டிருந்து வருவதைத்தான் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமாகவும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நேற்று சனிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது நடந்து கொண்டமை குறித்து, இங்கு பதிவு செய்தல் அவசியமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களுக்கு இதன்போது அமைச்சர் றிசாட் தெளிவுபடுத்தினார்.

#கேள்வி

“இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதல்ல. அப்படியென்றால் இந்த நாட்டில் காவல்துறை இருக்கின்றது. உளவுத்துறை இருக்கின்றது. முஸ்லிம்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஏன் அவர்களை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் முடியாது? அதேபோன்று, மலட்டுத்தன்மையுள்ள மருந்தை உணவுப்பண்டங்களில் முஸ்லிம்கள்  கலந்து கொடுக்கின்றார்கள் என்றால், அவற்றை ஏன் கண்டுபிடிக்க முடியாது” என, இதன்போது மகாநாயக்கர்களிடம் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

சபாநாயாகர் கருஜயசூரிய தலைமையில், நேற்று சனிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து  மகாநாயக்க தேரர்களை தனித்தனியாகச் சந்தித்தனர். இதன்போதே, அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கண்ட விடயங்களை தெளிவுபடப் பேசினார்.

இந்த சந்தர்ப்பத்தில் மகாநாயக்க தேரர்கள்; “வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாட் அழித்து மக்களை குடியேற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது” என தெரிவித்த போது, அமைச்சர், அதற்கும் விளக்கமளித்தார்.

#ஐயமும், தெளிவும்

“25 வருடங்களுக்கு முன்னர், வட மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் வளர்ந்திருந்த காடுகளை துப்புரவாக்கினர். இதன்போதான், இந்தக் குற்றச்சாட்டு என்மீது சுமத்தப்பட்டது. நானும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அகதிதான். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான கதைகளை இனவாத நோக்கத்தில் பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில்ஆராய்வதற்கு, விசாரணை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். அந்த விசாரணை அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது வெளிப்படுத்தப்படவில்லை. சபாநாயகரிடமும் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து, விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தவறு இருந்தால் உரியவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் வேண்டியுள்ளோம்.

இனவாதிகள் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி, முஸ்லிம்கள் மீது வீண்பழி போடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை” என்று, அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.

#பாராட்டு

மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மௌனிகளாக இருந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வருகின்றமையினையே அநேகமாகக் கண்டுள்ளோம். ஆனால், நேற்றைய தினம் வழமைக்கு மாறாக, தனதும், தன்னுடைய சமூகம் சார்பானதுமான நியாயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு அமைச்சர் றிசாட் தெளிவுபடுத்தியமை பாராட்டுக்குரியதாகும்.

பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய விதத்தில் பேசுகின்ற தைரியம், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு வாய்த்திருக்கிறது.

சமூகத்துக்காக தொடர்ந்தும் – அவர் அதனை நிறைவேற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய