லொறிகளில் கொழும்புக்கு வரும் மாட்டிறைச்சி வகைகள் பரிசோதனைக்கு( மினுவாங்கொடை நிருபர் )

   வெளி இடங்களிலிருந்து லொறிகள் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்படும் அனைத்து  மாட்டிறைச்சி வகைகளையும் கடும் பரிசோதனைக்குட்படுத்த, கொழும்பு மா நகர சபையின் சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது. கொழும்பு பிரதான சுகாதார வைத்தியர் டொக்டர் ருவன் விஜயமுனியின் விசேட பணிப்பின்கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 
   கொழும்பு மா நகருக்கு தினமும் கொண்டுவரப்படும் மாட்டிறைச்சி வகைகளில் பெரும்பாலானவை மக்கள் பாவனைக்குப் பொருத்தமற்றவை என, பாவனையாளர்களினால் கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளையடுத்தே, இவ்வாறு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, மா நகர பிரதான உணவுப் பரிசோதகர் லால் குமார தெரிவித்துள்ளார். 
   தினமும் குளிரூட்டப்பட்ட 20 லொறிகளில் மாட்டிறைச்சி கொழும்புக்கு வரும் நிலையில், பெரும்பாலான லொறிகளில் குளிரூட்டப்படாமல் அல்லது அதி குளிரூட்டப்பட்ட நிலையில் மாட்டிறைச்சி வகைகள் கொண்டுவரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்