துப்பாக்கி ஏந்தியவாறு, ஆண் ஒருவரை அடித்துத் துவைத்த, மாகாண சபை உறுப்பினரின் மனைவி;


துப்பாக்கி ஏந்தியவாறு, ஆண் ஒருவரை அடித்துத் துவைத்த, UNP மாகாண சபை உறுப்பினரின் மனைவி; பொலிஸாரிடம் சிக்கினார்!!

தென் மாகாண சபை உறுப்பினர் எம். கே. கசும் மற்றும் அவரின் மனைவி இணைந்து, தனியார் பஸ் சாரதியொருவரை கொஸ்வத்த – பத்தரமுல்லையில் வைத்து, தாக்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினரின் மனைவி, கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, குறித்த சாரதியை கடுமையாகத் தாக்குகின்றமை, வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

கெப் ரக வாகனத்தில் பயணித்த தென் மாகாண சபை உறுப்பினனரும் அவரின் மனைவியும், குறித்த பஸ் சாரதியுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியுள்ளனர்.

இதன் போது மாகாண சபை உறுப்பினரின் மனைவி, துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு, மிரட்டியவாறே சாரதியைத் தாக்குகின்றமை, குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(புதிது)

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.