Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

திரைக்குப் பின்னால்


Raazi mohamed
===================

கலவரம் கட்டுப்பாடின்றிப் போய்க் கொண்டிருக்கிறது.அவசர காலச் சட்டம் இருந்தும் முப்படையினர் களத்தில் இருந்தும் பள்ளிகள் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. திட்டமிடப்பட்டு இது நடந்து கொண்டிருக்கிறது.இதன் பின்னால் இருக்கும் கை ஒன்றுதான்.அந்தக் கை பெரியதொரு அஜெந்தாவோடு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அம்பாரைச் சம்பவம் ஒரு கடையில் உருவாகிய சிறு சம்பவம்.அதனைக் கலவரமாக மாற்றியிருக்கிறார்கள். கண்டியில் நடந்தது ஒரு கைகலப்பு.அதை ஒரு பெரிய கலவரமாக மாற்றியிருக்கிறார்கள்.

ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற முடிவில் இந்தச் சக்திகள் வேலை செய்கின்றன. பிரச்சினை எதுவும் இல்லாவிட்டால் அதனை அவர்களே உருவாக்குகிறார்கள்.அம்பாரைச் சம்பவம் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.அல்லது ஒரு சிறிய பிரச்சினைப் பாரிய அளவில் ஊதிப் பெருப்பித்து கலவரமாக்க முயற்சிக்கிறார்கள்.கண்டி கலவரம் இதற்கு ஒரு உதாரணம்.

பள்ளிகளையும் வியாபார ஸ்தலங்களை மாத்திரமே தாக்குகிறார்கள்.உயிர்ச் சேதம் எதுவும் விளைவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.எரிகின்ற வீட்டில் சிக்கி மரணித்த சகோதரனின் மரணம் திட்டமிடப்பட்டதல்ல.இப்பொழுது அளுத்கடையில் தாடி வைக்கப்பட்ட ஒருவரின் தலை கிடப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி கிடைக்கிறது.அதற்கும் கலவரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

நேற்றைய பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச ஒரு நெடிய வெள்ளை ஆடை அணியும் அவர்தான் காரணம் இதற்கெல்லாம் என்று ஒரு அமைச்சரைக் சூசகமாகக் சொல்கிறார்.திடீரென்று ஞானசார நல்லவராகிறார்.ரிஷாட் பதியுதீன் ராவண பலகாய என்ற அமைப்பு பின்னால் நிற்கிறது என்கிறார்.

வெளிப்பிரதேசங்களில் இருந்து வருவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.சாப்பாட்டுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன.இதனைச் செய்வதற்கு பலர் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ராணுவமும் பொலீஸாரும் மௌனித்து நிற்கிறார்கள்.ஒன்று இலங்கையின் பாதுகாப்புப் பிரிவினர் அரசாங்கத்தின் கட்டளையைக் கேட்காமல் இந்தச் சக்திகளின் கட்டளைகளுக்கு செவிமடுக்கிறது அல்லது உண்மையில் அரசாங்கம் சரியான கட்டளைகளை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்காமல் இருக்கிறது.

இதற்குப் பின்னால் நன்றாக வடிவமைக்கப்பட்ட,திட்டமிடப்பட்ட தெளிவான கட்டளைக் கொண்ட ஒரு சக்தி இருக்கிறது.

அந்தச் சக்திதான் அளுத்கமைக்கும், ஜிந்தோட்டைக்கும்,அம்பாரைக்கும்,கண்டிக்கும் காரணம் போல் தோன்றுகிறது.அனைத்தும் ஒரு சிறு பிரச்சினை பாரிய ஒரு இனக்கலவரமாக மாறிய சம்பவங்கள்.அத்தனையிலும் ஒரு வகையான Pattern மற்றும் Trend காணப்படுகின்றன.

அந்தச் சக்தி இலங்கையின் தற்போதையை அரசாங்கத்தில் இருப்பவர்களா அல்லது முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்களா அல்லது இதற்கு அப்பால் தனியே இயங்கும் சக்தியா என்பது இன்னமும் தெரியவில்லை.ஆனால் பெரிய மட்ட ஆசீர்வாதங்களோடு இவை அரங்கேறுகின்றன என்பது மட்டும் புரிகிறது.

எமது அரசியல்வாதிகளால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது.ஆசியாவில் ஒரு நல்ல ஒரு புலனாய்வுத் துறை இலங்கையில் இருக்கிறது.இதன் சூத்திரதாரிகள் யார் என்றும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது சிறுபிள்ளைத் தனமானது.

இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு இவை எல்லாம் தெரியும்.நீதி அமைச்சராக இருந்த றவூப் ஹக்கீமுக்கும் இது அனைத்து தெரியும்.ஆனால் முந்தைய அரசும் இன்றைய அரசும்  ஏன் அவர்களை வெளியிடத் தயங்கிறார்கள்.ஏன் அவர்களைத் தண்டிக்கத் தயங்குகிறார்கள்?

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு பலமான சக்தி பின்னால் இருக்கிறது.அவர்கள் யார் என்பதை நாம் கண்டுபிடிகாத வரைக்கும் இவை தொடரத்தான் போகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய