இந்த‌ க‌ல‌வ‌ர‌த்துக்கு பின்னால் ம‌ஹிந்த‌


இந்த‌ க‌ல‌வ‌ர‌த்துக்கு பின்னால் ம‌ஹிந்த‌ இருப்ப‌தாக‌ சொல்வ‌து உல‌க‌ ம‌கா ம‌ட‌த்த‌ன‌ம்.
தாக்குத‌லை ந‌ட‌த்திய‌ சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ம‌த்தியில் ம‌ஹிந்த‌ ஆத‌ர‌வானோர் இருக்க‌லாம். ர‌ணில், மைத்திரி ஏன் ஜே வி பி ஆத‌ர‌வானோரும் இருக்க‌லாம். ஆனால் இவ‌ர்க‌ளை அட‌க்கும் அதிகார‌ம் யாரிட‌ம் உண்டு?
ம‌ஹிந்த‌விட‌மா ர‌ணில் அர‌சிட‌மா?
கீழ் ம‌ட்ட‌ பொலிசில் இராணுவ‌த்திலும் இவ்வாறு ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இருப்ப‌ர். ஆனால் இவ‌ர்க‌ளுக்கெல்லாம் உத்த‌ர‌வு போடும் அதிகாரி நிச்ச‌ய‌ம் ம‌ஹிந்த‌ ஆத‌ர‌வாள‌ர் அல்ல‌. அர‌சாங்க‌ம் மாறிய‌வுட‌ன் மேல் ம‌ட்ட‌ உய‌ர் அதிகாரிக‌ள் அனைத்தும் மாற்ற‌ப்ப‌ட்டு த‌ம‌க்கு விசுவாச‌மான‌ அதிகாரிக‌ளையே அர‌சு நிய‌மித்த‌து. அவ‌ர்க‌ளும் ர‌ணில் ம‌ற்றும் ஜ‌னாதிப‌தியின் அனும‌தி இன்றி எந்த‌ உத்த‌ர‌வையும் த‌ம‌து ப‌டையின‌ருக்கு இட‌மாட்டார்க‌ள்.

இந்த‌ நிலையில் அம்பாரை க‌ல‌வ‌ர‌த்தின் போது அர‌சாங்க‌ம் க‌ல‌க‌த்தை அட‌க்காம‌ல் பார்த்துக்கொண்டிருந்த‌து. இக்க‌ல‌வ‌ர‌வ‌ர‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ப‌டை உய‌ர் அதிகாரிக‌ளுக்கு இட்டிருப்பாரா ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ இட்டிருப்பாரா?

அத‌ன் பின் க‌ண்டியில் க‌ல‌வ‌ர‌ம் ஆர‌ம்பித்த‌ போது அர‌சு நினைத்திருந்தால் ஒரு ம‌ணி நேர‌த்தில் அத‌னை க‌ட்டுப்ப‌டுத்தியிருக்க‌ முடியும். க‌ல‌வ‌ர‌க்கார‌ர்க‌ளை முழ‌ங்கால் கீழாவ‌து சுடும்ப‌டி க‌ட்ட‌ளையிட்டிருந்தால் க‌ல‌க‌ம் அட‌ங்கியிருக்கும். ஆனால்  அவ்வாறு செய்ய‌ வேண்டாம் என‌ ம‌ஹிந்த‌ க‌ட்ட‌ளையிட்டிருப்பார் என‌ முட்டாள் கூட‌ சொல்ல‌ மாட்டான்.

ஆக‌வே இந்த‌க்க‌ல‌வ‌ரத்தின் போது பாதுகாப்பு ப‌டையின‌ர், பொலிசார் சும்மா பார்த்துக்கொண்டு நில்லுங்க‌ள் என‌ அர‌ச‌ மேலிட‌த்தின் உத்த‌ர‌வு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌தே புத்திசாலிக‌ள் புரிய‌ வேண்டிய‌தாகும்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்