Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

முஸ்லிம்களுக்கு செய்த துரோகத் தனங்களை ஒரு கணம் மீட்டிப் பார்ப்போம்..?


Muzammil
“ முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்களை நிராகரித்து விட்டு, அவசர அவசரமாக எம்மால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி மைத்ரி மற்றும் ரணில் கூட்டு  முஸ்லிம்களுக்கு செய்த துரோகத் தனங்களை ஒரு கணம் மீட்டிப் பார்ப்போம்..?

 முஸ்லிம்களை மத கலாசார ரீதியில் நிந்தனை செய்து அப்போதைய ஆளும் அரசாங்கத்திலிருந்து தூரப் படுத்தி  பாரியதொரு சதியின் மூலமே இந்த நல்லாட்சி கொண்டுவரப் பட்டது.  ஆட்சி அமைக்கப்பட்டு நூறுநாள் திட்டத்தில் குறிப்பிட்டது போன்று மத நல்லிணக்க சட்டத்தை கொண்டு வந்து முஸ்லிம்களின் தன்மானத்தை பாதுகாத்தார்களா..?
 முன்னாள் ஜனாதிபதி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஞானசாரவை சந்திப்பதை தவிர்த்து வந்த வேளையில் நல்லாட்சி ஜனாதிபதி மைத்ரி பல தடவைகள் ஞானசாரவை நேரடியாக சந்திப்பதிலும் மத நல்லிணக்க சமய தலைவர்களை ஒன்று கூட்டும் போதும்  ஞானசாரவை அழைத்து அவரை கௌரவித்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்த வில்லையா ?
 பகிரங்க மேடைகளில் பல தடவைகள் ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்பதாக சூளுரைத்தவர்கள்   ஞானசாரா அவர்களை கைது செய்து நாய்க் கூண்டில் அடைத்தார்களா..?
 தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையை உடனடியாக தீர்த்துவிடுவோம் என்று கூறியவர்கள் தம்புள்ள பள்ளிவாசலுக்கு 80பேர்ச் காணியும் அதிலே  புதிய பள்ளிவாசலும் கட்டித்தந்தார்களா.?

 அதேபோன்று இனவாத சதிகாரர்களால் திட்டமிட்டு மூடப் பட்ட  கிராண்பாஸ், தெஹிவலை, மஹியங்கனையில் உள்ள பள்ளிவாசல்களை திறந்து விட உத்தரவிட்டார்களா..?

 தேர்தலுக்கு முன் மேடைக்கு மேடை “ தாம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின்  மத கலாசார சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவோம், மதக் கலவரங்களை ஏற்படுத்த விடமாட்டோம்” என்று வாக்குறுதியளித்தவர்கள்,  தங்களுடைய ஆட்சியில் எந்த இனக்கலவரங்களும் ஏற்படாமலிருக்க பாதுகாப்புத் தந்தார்களா..?

 

 இவர்களுடைய ஆட்சியில் எந்த முஸ்லிம்களின் கடைகளும் இனவாதிகளினால் எறிக்கப்படாமலிருக்க பார்த்துக்கொண்டார்களா, அப்படித்தான் பல எறிக்கப்பட்டிருந்தாலும் அது "கரண்சோட்" என்று அவருடைய பொலிசாரை வைத்தே  உலகுக்கு அறிவிக்க வில்லையா ..?

 அளுத்கம வன்முறைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்காக உரிய  விசாரணைகளை நடத்தி தீர்வை பெற்றுத்தந்தார்களா ..?.

 இவ்வாட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றான அளுத்கம பிரச்சினையின் சூத்திர தாரிகளை இனம்கண்டு தண்டனை பெற்றுக்கொடுத்தார்..?

 மரிச்சிக்கட்டியை வில்பத்து வனாந்திரம் என்று கூறி  கூக்குரலிட்ட இனவாதிகள் பக்கசார்பான துவேஷமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ,   அந்த மக்கள் பரம்பரையாக பாவித்த சொந்தக் காணிகளை அதிவிஷேட வர்த்தமானியின் மூலம் அபகரித்து  முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி மக்களை மேலும் நிர்கதியான நிலைக்கு ஆளாக்க வில்லையா ?  
 இரக்காமம் மாயக்கல்லில் முஸ்லிம்களின் காணிகளில் , பௌத்தர்களே இல்லாத பகுதியில்  அதுவும் இவ்வரசாங்கத்தின் கபினட் அமைச்சராகவுள்ள தயாகமகேயின் தலைமையில் இனவாதிகள் சிலை வைத்தபோது,   அதனை அப்படியே அங்கீகரித்து நிரந்தரமாக்கவில்லையா...?

 கண்டி லைன்  பள்ளிவாசல் டோம் பிரச்சினை வந்தபோது அதனை இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைய கட்டுமான பணிகளை நிருத்தவில்லையா ...?
 வட்டமடு காணிப்  பிரச்சினையை அறிந்து உடனடியாக அந்த விடயத்தில் தலையிட்டு அதனை மீட்டுக்கொடுத்தார்களா...?

 ஜனாதிபதி மைத்ரீ அண்மையில் முஸ்லிம் நாடான கட்டாருக்கு விஜயம் செய்து அங்கிருந்து அத்தனை சலுகைகளையும் பெற்று, பயணத்தை முடித்து வந்த கையோடு, மாடுகளை ஏற்றிச் செல்லுவதற்கு இருந்த தடைபோடவில்லையா .?

 காலி கிந்தோட்டை நகரில் நடந்த  இனக்கலவரத்தை தனது கட்டுப்பாட்டிலுள்ள பொலிசாரையும், விசேட அதிரடிப்படையினரையும் திட்டமிட்டு  களத்திலிருந்து நேரகாலத்துடன் ஒதுக்கிக் கொண்டு முஸ்லிம்களின் உடமைகளை எரித்து சாம்பலாக்க துனைபோகவில்லையா ...? இதனை போலிஸ்மா அதிபர் கூட பகிரங்கமாக  ஒத்துக் கொண்டது ஞாபகமில்லாயா .?

 இதுவரை  நடந்த அந்த அசம்பாவிதங்களுக்கு எதிராக தமது  கண்டனத்தையும், தனது ஆழ்ந்த கவலையையும் தெறிவித்தார்களா..?  அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களையும், நஸ்டஈடுகளையும் வழங்கினார்களா..?

கடைசியாக ,,,  .....  போலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திலுள்ள அம்பாறை ஜும்மா பள்ளியை இனவாதிகள் தீவைத்து பல கடைகளையும் ,  சொத்துக்களையும் சேதமாகிய இனவாதிகளை ஒருவார காலமாகியும் இன்றுவரை கைது செய்ய வில்லை. ( இப்பள்ளியை தீ வைத்தது மகிந்தவின் ஆதரவாளர்கள் என்று கூறுகின்றார்கள். அப்போ சட்டம் , ஒழுங்கு பாதுகாப்பு அமைச்சராக உள்ளது மகிந்தவா ..... யார்காதில் பூ வைக்கின்றார்கள் )

இப்படி எவ்வளவோ விடயங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செய்துகொண்டு பௌத்த இனவாதிகளை திருப்தி படுத்துவதற்காகவும் பெரும்பனமை பௌத்த வாக்குகளை கவரும் நோக்கில் செயற்படும் இந்த போலி  நல்லாட்சி அரசு நடந்த அனைத்துக்கும் காரணமாக  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது விரல் நீட்டுகின்றது.  
 நன்றாக சிந்தித்து பாருங்கள், முன்னால் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தின் ஆரம்ப காலங்களில் இந் நாட்டில் முஸ்லிம்களுக்கோ சிறும்பான்மை சமூகங்களுக்கோ பிரச்சினைகள் இருக்கவில்லை. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தின் இறுதி கட்டத்திலேயே இந்த பிரச்சினைகள் தலைதூக்கின. அதாவது யுத்த வெற்றியின் மூலம் இந் நாட்டு மக்களின் பேராதரவை பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்த காலத்தில் மேற்கத்திய நாடுகளின் உதவிகளை அல்லது உபதேசங்களை நாடவில்லை. மாறாக முஸ்லிம் நாடுகளுடனும் இடதுசாரி கொள்கையுடைய நாடுகளின் உதவியுடனுமே யுத்தத்தை வெற்றி கொண்டார். அத்துடன்  இந்த நாட்டை முன்னேற்றவும் மேலைத்தேய நாடுகளை அவர் நாடவில்லை. மாறாக முஸ்ளிம் நாடுகளுடனேயே அவர் தொடர்புகளை பேணி வந்தார். இதற்கு எதிராகத் தான் அவரது ஆட்சியை மாற்ற முஸ்லிம்களை அவருக்கெதிராக அணிதிரலவைக்க அவரது ஆட்சியின் இறுதி காலத்தில் இவ்வாறனதொரு பிரச்சினையை தோற்றுவித்தார்கள். இந்த சதிக்கு உள்நாட்டு சக்திகளாக இருந்த , மேற்கினதும் யூத கைகூளிகளினதும் கூட்டாளிகளான ரணில் அணி  துணைபோனது. ஆனால் மிகக் கூடிய விரைவில் இந்த நாட்டில் பெரும்பனமை மக்களின் பேராதரவுடன்  மீண்டும் மஹிந்த ஆட்சி மலர உள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய