மாதம்பையில் பதற்றம் ; பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு


( மினுவாங்கொடை நிருபர் )

   சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர்,  வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில்,  குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
   மாதம்பையில்  பேக்கரித் தொழிலில் ஈடுபடும் 27 வயதுடைய திருமணமான முஸ்லிம் நபர் ஒருவரே, இவ்வயோதிபரை 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார். 
இதன்காரணமாக, குறித்த வயோதிப நபரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
   இந்நிலையில்,  மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் (18)  ஞாயிற்றுக்கிழமை இரவும்,  (19) திங்கட்கிழமை (நேற்று)  அதிகாலையும் ஒருவித பதற்றநிலை காணப்படுகிறது.
   இதையடுத்து, கண்டிப்  பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதம் போன்று, மாதம்பை பகுதியிலும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுமோ என, இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கும்  ஒருவித பதற்றநிலை உருவாகியுள்ளது. 
   எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இப்பகுதியில்  பாதுகாப்பைப்  பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   வயோதிபர்மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் மாதம்பை பொலிஸாரினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தற்போது பொலிஸ் காவலில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்