த‌மிழ‌ருக்கெதிராக‌ க‌ல்முனை பொலிசில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ முறைப்பாட்டை வாப‌ஸ் வாங்க‌ வேண்டும்


க‌ண்டியில் ர‌ணில் அர‌சின் ஆத‌ர‌வுட‌ன் சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்ப‌ட்ட‌ போது க‌ல்முனையில் கொஞ்ச‌ம் ஓவ‌ராக‌ பேசிய‌ த‌மிழ‌ர் ஒருவ‌ருக்கெதிராக‌ க‌ல்முனை பொலிசில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ முறைப்பாட்டை வாப‌ஸ் வாங்க‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம்.
மேற்ப‌டி ந‌ப‌ர் க‌ல்முனை ப‌ன்ச‌லையை முஸ்லிம்க‌ள் உடைக‌ வேண்டும் என்ற‌ ரீதியில் பேசவில்லை. மாறாக‌ அந்த‌ நேர‌த்தில் ஹ‌ர்த்தால் அனுஷ்டிக்க‌ப்ப‌ட்ட‌ போது சில‌ர் த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதியில் ட‌ய‌ர் போட்டு எரித்த‌தை க‌ண்ட‌ ஆத்திர‌த்திலேயே அவ‌ர் ஏன்டா இங்க‌ வ‌ந்து ட‌ய‌ர் எரிக்கிறீர்க‌ள்.முடியுமென்றால் உங்க‌ளுக்கு சொர‌ணை இருந்தால் இதோ ப‌ள்ளியை உடைத்த‌வ‌ர்க‌ளின் ப‌ன்ச‌லைக்கு ஒரு க‌ல்லையாவ‌து எறியுங்க‌ளேன் என‌ கூறுகிறார். இது அனைவ‌ருக்கும் வ‌ரும் நியாய‌மான‌ ஆத்திர‌மாகும்.
ஒரு கால‌த்தில் புலிக‌ள் முஸ்லிம் ப‌குதிக‌ளில் வைத்து பொலிசை, ஆமியை சுடுவார்க‌ள். இத‌னால் பொலிசார் அந்த‌ இட‌த்தில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்க‌ளை சுட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிறைய‌ உண்டு.
இது போன்றே த‌மிழ‌ர் வாழும் ப‌குதிக்குள் நின்று சிங்க‌ள‌ அர‌சுக்கெதிராக‌ ட‌ய‌ர் எரிக்க‌ முற்ப‌ட்ட‌து த‌வ‌றாகும். இத‌னை க‌ண்டித்த‌மையின் வெளிப்பாடே மேற்ப‌டி த‌மிழ் ம‌க‌னின் பேச்சாகும்.
ஆக‌வே பாரிய‌ ப‌ல‌ அழிவுக‌ளை ஏற்ப‌டுத்திய‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளுக்கெதிராக‌ வ‌ழ‌க்குக‌ளை முன்னெடுக்க‌ வேண்டிய‌ இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ஒரு சாதார‌ண‌  த‌மிழ் ம‌க‌னுக்கெதிராக‌ க‌ல்முனையை சேர்ந்த‌ சில‌ முஸ்லிம் ந‌ப‌ர்க‌ளால் வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கை வாப‌ஸ் பெறுமாறு உல‌மா க‌ட்சி அன்பாய் கேட்டுக்கொள்கிற‌து.

Comments

popular posts

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

தேசிய காங்கிரசிடம் உதவி கேட்கும் முஸ்லிம் பெருங்கட்சிகள்.