Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை சபையில் கிடைத்தால் துரிதமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்


மூன்றில் இரண்டு  பெரும்பான்மை சபையில் கிடைத்தால் துரிதமாக மாகாண சபைத்  தேர்தல் நடத்தப்படும்

- அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவிப்பு


( மினுவாங்கொடை நிருபர் )

   மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால், துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக,  மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
   எதிர்வரும் 21 ஆம் திகதி இது தொடர்பான பாராளுமன்ற விவாதமும்,  வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்ய எந்தக் குழுவும் அமைக்கப்படமாட்டாது.  பாராளுமன்றத்திலேயே தேவையான திருத்தங்களைச்  செய்ய முடியும் என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.
   உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்  மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு  கருத்துத்  தெரிவித்தார்.  அமைச்சர் அங்கு மேலும்  பேசும்போது குறிப்பிட்டதாவது,  
   எல்லை நிர்ணய அறிக்கையைப்  பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு,  அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். 
   உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தேர்தல் புதிய கலப்பு முறையில் நடைபெற்றுள்ள நிலையில்,  மாகாண சபைத்  தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும்,  மாகாண சபைத்  தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கிச்  செல்வது உகந்ததல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும்,  புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன்.
   சிறு மற்றும் சிறுபான்மைக்  கட்சிகள்,  பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால்,  சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க ​வேண்டும். மேன்முறையீடுகளைச் செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில்,  எம்.பி. க்களினூடாகவே தேவையான திருத்தங்களையும், மாற்றங்களையும்  பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.
   எல்லை நிர்ணய அறிக்கையைத்  தயாரிக்க சுயாதீனமாக ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. சகல கட்சிகளையும் அழைத்து சர்வ கட்சிக்  கூட்டமொன்றை கூட்டுமாறு, நான் இந்தக் குழுவிடம் ஆலோசனை முன்வைத்திருந்தேன். ஆனால்,  அறிக்கை காலதாமதமாகும் என இந்தக் குழு கூறியதால், சர்வ கட்சிக் குழு கூட்டப்படவில்லை. கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் திருத்தங்களைச்  சமர்ப்பிக்க முடியும்.
   தற்போது மூன்று மாகாண சபைகள் ஆளுநரின் கீழ் செயற்படுகின்றன. எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்பட்டு தேர்தல் நடைபெறும் வரை, தொடர்ந்து அவை ஆளுநரின் கீழேயே செயற்படும்.
   எல்லை நிர்ணயத்தில் கலப்பு மற்றும் விகிதாசார வீதங்கள் 50 ற்கு 50 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அனைத்துத்  திருத்தங்களையும் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. உள்ளூராட்சி மன்றத்  தேர்தலைப்  போன்று, மாகாண சபைத் தேர்தலில்  அமைச்சருக்கு எந்தவித அதிகாரங்களும்  கிடையாது என்றார்.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தைப்  பிற்போடுமாறு,  சிறுபான்மைக்  கட்சிகள் பல  அரசாங்கத்தைக்  கோரியுள்ளதாகவும் தெரிய  வருகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய