Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

முஸ்லிம் அடிப்படைவாதம்


முஸ்லிம் அடிப்படைவாதம் உள்ளது, அதனை கட்டுப்படுத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்களில் உண்மையான பின்னணி என்னவென்பதை கண்டறிய உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இரண்டு தரப்பின் தவறுகளையும் தண்டிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நிலைமைகளை கட்டுப்படுத்தவே சமூக தளங்கள் முடக்கப்பட்டது, விரைவில் அனைத்தும் வழமைக்கு வந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று -09- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சின் வணிக கப்பற் தொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  அவர் மேலும் கூறுகையில்,

அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்களை வைத்து இன்று நாட்டில் பல்வேறு கருத்து மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இனவாதம் என்ற கருத்துகளை பரப்பி சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்கள் மனங்களில் பயத்தினையும் சந்தேகத்தினையும் பரப்பப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படவிருந்தது. இதனால் தான் கண்டி சம்பவத்தை அடுத்து நாம் உடனடியாக சமூக தளங்களை முடக்க தீர்மானம் எடுத்தோம். இந்த நகர்வு காரணமாக நிலைமைகளை எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது.

எவ்வாறு இருப்பினும் இந்த சம்பவங்கள் தூண்டுதலில் இடம்பெற்று வருகின்றது. சிங்கள இனவாத அமைப்புகளும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் உள்ளன. ஆகவே இவற்றின் பின்னணியினை அறியவும் உண்மைகளை கண்டறியவும் உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்போம். ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் குற்றவாளிகளை கண்டறிவோம். சிங்கள இளைஞன் ஒருவனை தாக்கிய சம்பவம் தான் காரணம் என்றாலும் அதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இது சிங்களவரா, முஸ்லிமா என்ற பேதத்திற்கு அப்பால் குற்றவாளியை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும்.

இந்த நாட்டில் 30 ஆண்டுகால யுத்ததம் நிலவியது அதில் பயங்கரவாதம் தோற்கடிக்க பட்டது. அதன் பின்னர் தமிழ் அடிப்படைவாத செயற்பாடுகள் பாரிய அளவில் குறைவடைந்துவிட்டது. இன்று தமிழ் சிங்கள முரண்பாடுகள் என ஒன்றும் இல்லை. ஒரு சில சம்பவங்கள் இருந்த போதிலும் பாரிய அளவில் முரண்பாடுகள் ஏற்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதம் ஒன்று உள்ளது. அதனை நாம் மறுக்கவில்லை. ஆகவே  அதனையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும். வெறுமனே ஒரு தரப்பை மட்டுமே குற்றம் சுமத்திவது ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு தரப்பினர் மீதும் உள்ள குற்றங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும்.

முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தமிழ் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கையின் வடக்கில் இடம்பெற்றதாக கூறி அதனை அரசியலாக மாற்றி இனவாதம் கக்கும் அரசியல் தலைமைகளும் இருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் இந்த காணொளியை பதிவேற்றி சிங்கள மக்கள் மத்தியில் பரப்பியதையும் நாம் அறிவோம். முன்னாள் ஜனாதிபதி ஆட்சியில் இனவாதம் சகல தரப்பினாலும் பரப்பப்பட்டது. இனவாதம் எரிபொருளாக ஊற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறிய தீக்குச்சி பத்தவைக்கப்பட்டால் கூட தீயாக பரவி முழு சமூகத்தையும் அழித்துவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே முன்னைய ஆட்சியின் தவறுகள் இன்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

இளைஞர் சமுதாயம் இணையதளம், சமூக தளங்களில் அதிக நாட்டம் காட்டிவருகின்றனர். ஆகவே இளம் சமுதாயம் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். நிலைமைகளை கட்டுப்படுத்த தற்காலிகமாக சமூக தளங்கள் சிலவற்றை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெரும்பாலும் நாளைய தினம் அனைத்து தளங்களும் வழமைக்கு வந்துவிடும். எனினும் இனியும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும். ஒரு சிலர் தமது தேவைக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு ஒட்டமொத்த மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய