க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பைக்கு இரு த‌மிழ‌ர்க‌ளை நிய‌மித்த‌மை த‌வ‌றான‌து

க‌ல்முனையில்த‌மிழ் முஸ்லிம் இன‌வாத‌த்தை பேசிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பைக்கு  இரு த‌மிழ‌ர்க‌ளை நிய‌மித்த‌மை த‌வ‌றான‌து என்ப‌தை வை எல் எஸ் ஹ‌மீத் மிக‌த்தெளிவாக‌ அருமையாக‌ எழுதியுள்ள போதிலும் இது அவ‌ரின் கால‌ம் க‌ட‌ந்த ஞான‌மாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

க‌ட‌ந்த‌ தேர்த‌லில் மு. காவின் திருட்டு யானைக்கு வாக்க‌ளிக்கும்ப‌டியே வை எல் எஸ்சும் கூறியிருந்தார். யானைக்கு வாக்க‌ளிப்ப‌த‌ன் மூல‌மே சாய்ந்த‌ம‌ருதின் ஒத்துழைப்பு இல்லாத‌ க‌ல்முனையை காக்க‌ முடியும் என‌ கூறினார். ஆனால் மு. கா என்ப‌து முஸ்லிம் ச‌மூக‌ துரோக‌ க‌ட்சி என்ப‌தாலும் அது ட‌ய‌ஸ்போராவின் ப‌ண‌த்தில் இய‌ங்குவ‌தாலும் க‌ல்முனையை காட்டிக்கொடுப்பார்க‌ள் என்ப‌தால் யானைக்கு வாக்க‌ளிக்க‌ வேண்டாம் என்றும் ட‌ய‌ஸ்போராவுக்கு அடிப‌ணியாத‌  த‌லைமையை கொண்ட‌ அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சுக்கு வாக்க‌ளிக்கும்ப‌டியும் நாம் தீவிர‌ பிர‌ச்சார‌ம் செய்தோம்.

இத‌னை பெரும்பாலான‌ க‌ல்முனை முஸ்லிம்க‌ள் ஏற்காத‌ போதும் இன்று அனைவ‌ரும் கைசேத‌ப்ப‌ட்ட‌ நிலையில் உள்ள‌ன‌ர்.

சில‌ர் சொல்கிறார்க‌ள் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு யாழ் ச‌பையில் இரு முஸ்லிம்க‌ளை நிய‌மித்துள்ள‌தே க‌ல்முனையில் முஸ்லிம் காங்கிர‌ஸ் இரு த‌மிழ‌ர்க‌ளை நிய‌மித்த‌து த‌வ‌றா என‌. த‌மிழ் கூட்ட‌மைப்பு  ம‌ட்டும‌ல்ல‌ சிங்க‌ள‌ க‌ட்சிக‌ளும் த‌மிழ‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ளையும் ச‌பைக‌ளுக்கு நிய‌மித்துள்ள‌ன‌.  அதே போல் முஸ்லிம் க‌ட்சிக‌ளும் த‌மிழ‌ர்க‌ளை நிய‌மித்துள்ள‌ன‌.
யாழ் மாந‌க‌ர‌ ச‌பையை முஸ்லிம்க‌ள் பிடித்து விடுவார்க‌ள் என‌க்கூறி த‌மிழ் கூட்ட‌மைப்பு வாக்கு பெற‌வில்லை. அவ்வாறு கூறி த‌மிழ் ம‌க்க‌ளின் வாக்குக‌ளை பெற்ற‌ பின் முஸ்லிமை நிய‌மித்தால் அது த‌வ‌று. ஆனால் முஸ்லிம்க‌ளையும் த‌மிழ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் நிய‌மிப்பார்க‌ளாயின் அத‌னை த‌வ‌றாக‌ காண‌ முடியாது.

க‌ல்முனையில் பிர‌ச்சினை இதுவ‌ல்ல‌. க‌ல்முனையில் முஸ்லிம் காங்கிர‌ஸ் செய்த‌ பிர‌ச்சார‌ம் என்ன‌வென்றால் க‌ல்முனை முஸ்லிம்க‌ள் வேறு முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கு வாக்க‌ளித்தால் க‌ல்முனையை த‌மிழ‌ர்க‌ள் ஆக்கிர‌மித்துவிடுவார்க‌ள் என்ப‌தால் யானைக்கு வாக்க‌ளிக்கும் ப‌டியும் யானையை நாம் ம‌ர‌த்தில் க‌ட்டி வைத்திருப்ப‌தால் நாம் விரும்பிய‌ மாதிரியே எம‌து ஆட்க‌ளை நிய‌மிப்போம் என‌வும் கூறினார்க‌ள். இப்போது  முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளால் த‌மிழ‌ர் இருவ‌ர் க‌ல்முனையில் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌மை மூல‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் யானைப்ப‌சிக்கு மீண்டும் ப‌லியாகியுள்ள‌துட‌ன் க‌ல்முனை முஸ்லிம்க‌ளை அப்ப‌ட்ட‌மாக‌ ஏமாற்றியுள்ள‌து.

 மு. கா என்ப‌து எப்ப‌டிப்ப‌ட்ட‌ மோச‌மான‌ க‌ட்சி என்று தெரிந்தும் த‌ன‌து இரு க‌ண்ணும் போனாலும் ப‌ர‌வாயில்லை எதிரியின் ஒரு க‌ண்ணாவ‌து போக‌ வேண்டும் என்ப‌து போல் ந‌ண்ப‌ர் வை எல் எஸ் யானைக்கு ஆத‌ர‌வாக‌ எழுதினார். இப்போது க‌ண் ம‌ட்டும‌ல்ல‌ க‌ல்முனையின் முழு முக‌மும் சிதைந்து போயுள்ள‌து.

முஸ்லிம் காங்கிர‌சை க‌ல்முனையிலிருந்து ஒழிக்காத‌ வ‌ரை க‌ல்முனையை காப்பாற்ற‌ முடியாது என்ப‌தை இப்போதாவ‌து ந‌ண்ப‌ர் ஹ‌மீத் புரிந்திருப்பார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்