ம‌ஹிந்த‌வும் கோட்டாவும் ஊட‌க‌விய‌லாள‌ரை ம‌தித்த‌ன‌ர் என்ப‌து தெரிகிற‌து.என‌து பால்ய‌ ந‌ண்ப‌ரும் இனிமையான‌ ஊட‌க‌விய‌லாள‌ருமான‌ சித்தீக் காரிய‌ப்ப‌ர் இட்ட‌ ப‌திவொன்று ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை வெளிச்ச‌மாக்கியுள்ள‌து.

அதாவ‌து ம‌ஹிந்த‌ ஆட்சியில்  அவ‌ர் அர‌சுக்கு எதிரான‌ இணைய‌த்த‌ள‌மொன்றில் வேலை செய்த‌ போது அவ‌ர் கோட்டாப‌ய‌வினால் கைது செய்ய‌ப்ப‌ட்டார். 4ம் மாடிக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டார். பின்ன‌ர் மேற்ப‌டி இணைய‌த்த‌ள‌த்தின் உரிமையாள‌ரான‌ ம‌ங்க‌ள‌ ச‌ம‌ர‌வீர‌ நீதியை நாடிய‌தால் சித்தீக் காரிய‌ப்ப‌ர் விடுவிக்க‌ப்ப‌ட்டார்.
இங்குள்ள‌ சிந்த‌னை என்ன‌வென்றால் ம‌ஹிந்த‌ ஆட்சியில் ஊட‌க‌விய‌லாள‌ருக்கு ஆப‌த்து இருந்திருந்தால் 4ம் மாடிக்கு போன‌ சித்தீக் அப்ப‌டியே வானுல‌க‌ம் போயிருப்பார். 4ம் மாடி வ‌ரை கொண்டு போன‌ கோட்டாவைக்கு இது பெரிய‌ விச‌ய‌ம் அல்ல‌.
 அவ்வாறு ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தால் ம‌ஹிந்த‌வும் கோட்டாவும் ஊட‌க‌விய‌லாள‌ரை ம‌தித்த‌ன‌ர் என்ப‌து தெரிகிற‌து.
அது ம‌ட்டும‌ல்ல‌. ம‌ங்க‌ள‌ ச‌ம‌ர‌வீர‌ அப்போது எதிர்க்க‌ட்சிக்கார‌ர். அவ‌ர‌து முய‌ற்சிக்கு நீதி செவி சாய்த்த‌து என்றால் எந்த‌ள‌வுக்கு ம‌ஹிந்த‌ ஆட்சியில் நீதிச்சுத‌ந்திர‌ம் இருந்த‌து என்ப‌தை புரிய‌லாம்.
இப்போதைய‌ அதே ம‌ங்க‌ள‌, ர‌ணில் ஆட்சியில் அப்பாவி க‌ண்டி முஸ்லிம்க‌ள் ஐந்து நாட்க‌ள் ஓட‌ ஓட‌ அடிக்க‌ப்ப‌ட்டும் நீதியும் ச‌ட்ட‌மும் ஒழுங்கும் குப்புற‌ ப‌டுத்து குற‌ட்டை விட்ட‌ன‌.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் அம்பாரை ப‌ள்ளி தாக்குத‌லை செய்தியாக‌ வெளியிட்ட‌ அதே சித்தீக் என்ற‌ பெய‌ருடைய‌ முஸ்லிம் ஊட‌க‌விய‌லாள‌ர் ப‌த‌வி இடை நிறுத்த‌ப்ப‌ட்டுள்ளார்.

ஆக‌ சித்தீக் காரிய‌ப்ப‌ரின் க‌ருத்தின் ப‌டி ம‌ஹிந்த‌ கோட்டாப‌ய‌ ஆட்சியில் நீதியும் ச‌ட்ட‌மும் ஒழுங்காக‌ இருந்த‌துட‌ன் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கும் நீதி கிடைத்த‌து.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்