Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்


மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு!!
மெனிக்ஹின்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 885 கோடி ரூபாய் என பிரதேச செயலாளா் சமந்தி நாகதென்ன தெரிவித்தார்.
முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
திகன – ரஜவெல பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை நல்லிணக்க கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே, மெனிக்ஹின்ன பிரதேச செயலாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இக் கூட்டத்தில் திகன பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் தலைவா்கள்இ பிரதேச பௌத்த குருமாா்கள், முஸ்லிம் மீடியா போரம் தலைவா் என்.எம். அமீன், மெனிக்ஹின்ன, குண்டசாலை, திகன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் மேலும் கூறுகையில்;
“அவசர உதவியாக, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதற் கட்டமாக 50 ஆயிரம் ருபாவும், முற்றாக சேதமைந்த சொத்துக்களுக்கு 01 லட்சம் ரூபாவும் நஷ்ட ஈடாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனாலும், உங்களுடைய கடை அல்லது வீடுகளின் முன்வாயிலில் பொருத்தப்பட்ட ஒரு கதவு அல்லது யன்னலின் இழப்புக்கே இந்த நஷ்ட ஈடு போதாது” என்றார்.
அங்கு வருகை தந்திருந்த வலுக்காராம விகாரதிபதி உரையாற்றுகையில்;
“தற்போது வளர்ந்து வரும் இளைஞர் பரம்பரையினர், வித்தியசமான ஒரு யுகத்தில் வாழ்கின்றனா். எமது பழங்கால பரம்பரையினரிடையே இருந்த ஐக்கியம், அந்நியோன்யம், நட்பு முறைகள் தற்போதைய இளம் பரம்பரையினருக்குத் தெரியாது.
அவா்கள் செய்த இந்த நாசகார செயல்களினால் நாட்டுக்கு ஏற்படும் இழுக்குகள் பற்றி சிந்திப்பதில்லை. அவா்கள் புதிய நவீன சமூக வலையத்தளங்களில் கவரப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு, வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
முஸ்லிம்கள் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத அமைதியான சமுகத்தினர். அவா்கள் தத்தமது தொழில், வியாபாரத்தினைக் கவனித்துக் கொண்டு ஐந்து நேரமும் பள்ளிவாசலுக்குச் சென்று மதக் கடமைகளை சரிவர நிறைவேற்றியவாறு அமைதியாக வாழும் சமூகத்தினராவர்.
முஸ்லிம் மக்களோடு பழைய பரம்பரையினராகிய நாங்கள், கல்வி கற்கும் காலம் தொட்டு மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றோம். அந்த உறவுகள், நட்புகள் மற்றும் ஐக்கியம் ஆகியவை தற்போதைய இளம் சமுகத்தினருக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை” என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய