புதிய உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் இம்மாதம் 20 இல் ஆரம்பம் ;


முதலாவது பெண் மேயர் ரோஸி கொழும்பு மா நகர சபைக்கு தலைமை


( மினுவாங்கொடை நிருபர் )


   புதிய உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்,  இம்மாதம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை,  உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகுமென, மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 
உள்ளூராட்சி மன்றத் தலைமை ஆணையாளர்,  இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொண்டிருப்பதாக,  அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
   உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வு, பிரதி உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது. இதன்பிரகாரம், புதிய உள்ளூராட்சி மன்றப் பிரதி நிதிகளைத்  தெளிவுபடுத்துவற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
   இதேவேளை, கொழும்பு மா நகர சபையின் முதலாவது கூட்ட அமர்வு, கொழும்பு -  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (20) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, மா நகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில்  இடம்பெறவுள்ளது.
   இம்முறை கொழும்பு மா நகர சபையைப் பிரதி நிதிப்படுத்தும்  அங்கத்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளன.  அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால்,  கொழும்பு மா நகர சபையில் இதற்கான போதிய இடவசதிகள் இல்லை. எனவே,  இதற்காக புதிதாகக் கட்டிடம் ஒன்று வெகு விரைவில்  அமைக்கப்பட இருப்பதாகவும்,  மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்