இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
எனது பால்ய நண்பரும் இனிமையான ஊடகவியலாளருமான சித்தீக் காரியப்பர் இட்ட பதிவொன்று பல விடயங்களை வெளிச்சமாக்கியுள்ளது. அதாவது மஹிந்த ஆட்சியில் அவர் அரசுக்கு எதிரான இணையத்தளமொன்றில் வேலை செய்த போது அவர் கோட்டாபயவினால் கைது செய்யப்பட்டார். 4ம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேற்படி இணையத்தளத்தின் உரிமையாளரான மங்கள சமரவீர நீதியை நாடியதால் சித்தீக் காரியப்பர் விடுவிக்கப்பட்டார். இங்குள்ள சிந்தனை என்னவென்றால் மஹிந்த ஆட்சியில் ஊடகவியலாளருக்கு ஆபத்து இருந்திருந்தால் 4ம் மாடிக்கு போன சித்தீக் அப்படியே வானுலகம் போயிருப்பார். 4ம் மாடி வரை கொண்டு போன கோட்டாவைக்கு இது பெரிய விசயம் அல்ல. அவ்வாறு நடக்கவில்லை என்பதால் மஹிந்தவும் கோட்டாவும் ஊடகவியலாளரை மதித்தனர் என்பது தெரிகிறது. அது மட்டுமல்ல. மங்கள சமரவீர அப்போது எதிர்க்கட்சிக்காரர். அவரது முயற்சிக்கு நீதி செவி சாய்த்தது என்றால் எந்தளவுக்கு மஹிந்த ஆட்சியில் நீதிச்சுதந்திரம் இருந்தது என்பதை புரியலாம். இப்போதைய அதே மங