Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கமுடியுமா?


============================
வை எல் எஸ் ஹமீட்

இலங்கை அரசியல் தொடர்ந்தும் சூடான போக்கிலேயே தொடர்கிறது. ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கமுடியுமா? என சட்டமாஅதிபரிடம் ஆலோசனை கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான சட்ட நிலைப்பாட்டை சற்று ஆராய்வோம்.

பிரதமரை நியமித்தல்
—————————
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதற்கு மிகவும் சாத்தியமானவர் என்று  ஜனாதிபதி அபிப்பிராயப்படுகின்றவரை பிரதமராக நியமிக்க வேண்டும். ( 19வது திருத்தம், சரத்து 42(4))

இங்கு ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயம்’ என்பதை ஊன்றிக் கவனிக்குக. இதற்கு மீண்டும் வருகின்றேன். ஏனெனில் இந்த வார்த்தைப் பதத்திற்குள்தான் இந்த அரசியல் சதுரங்க ஆட்டமே தங்கியிருக்கின்றது.

வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் பதவி இழக்கும் ( நீக்கப்படுவதல்ல) சந்தர்ப்பங்கள்
——————————————————-
(1) ராஜினாமா செய்தல் (சரத்து 46(2) (a))
(2) பாராளுமன்ற அங்கத்துவத்தை இழத்தல் ( சரத்து 46(2) (b))
(3) அரசின் கொள்கைத்தீர்மானம், வரவு செலவு மதிப்பீடு ஆகியவற்றில் தோல்வியடைதல் மற்றும் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைதல் (சரத்து 48(2))

இவைதான் பிரதமர் பதவியிழக்கும் சந்தர்ப்பங்கள். பிரதமரை நீக்கும் ஒரு சந்தர்ப்பம் வெளிப்படையாக அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

அதேநேரம் சரத்து 47(2) இல் பாராளுமன்றம் கலைந்து தேர்தல் நடாத்தப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமர் இறந்தாலோ, இராஜினாமா செய்தாலோ அல்லது பிரதமர் பதவியில் இருந்து “ நீக்கப்பட்டாலோ” ஜனாதிபதி இன்னொரு அமைச்சரை பிரதமருடைய பணியைச் செய்வதற்கு நியமிக்கலாம்; எனக்கூறுகிறது.

அதாவது இந்த சரத்து பிரதமரை நீக்குவது தொடர்பாக பேசுகின்றது. ஆனால் இது பாராளுமன்றம் கலைந்து காபந்து அரசாங்கத்தின் காலத்திலாகும். எனவே, பாராளுமன்றம் கலையமுன் பிரதமரை மேற்சொன்ன காரணங்களுக்காகவேயன்றி பதவிநீக்க முடியாது; என வாதிடலாம். இதற்கு வலுசேர்க்கின்றது சரத்து 48(1).

இச்சரத்து பாராளுமன்றம் கலைவதற்குமுன் பிரதமர் பதவியிழக்கும்போது புதிய பிரதமர் நியமிப்பது தொடர்பாக பேசுகின்றது. இங்கு பிரதமர் பதவி முடிவுக்குவரும் சந்தர்ப்பமாக, மரணம், ராஜினாமா, அல்லது வேறுவகையில் ( otherwise) என்று கூறப்படுகிறது. இங்கு ‘ நீக்குதல்- removal ‘ என்ற சொல் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. எனவே ‘ நீக்குதல்’ என்ற விடயம்  பாராளுமன்றம் கலையமுன் இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கவில்லை; என முன்னைய வாதத்திற்கு வலுச்சேர்க்கலாம். அதேநேரம் ‘ வேறுவகையில் otherwise ‘ என்பது ‘ நீக்கம்- removal ‘ ஐயும் உள்ளடக்குகின்றது; என்றும் வாதிடலாம்.

மறுபக்கம்
—————-

பொதுவான சட்டநிலைப்பாடு என்னவெனில் நியமனம் செய்கின்ற ஒருவர் அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவரை பதவிநீக்கம் செய்கின்ற அதிகாரத்தைக் கொண்டிருப்பார் சட்டத்தினால் அவர் தடுக்கப்பட்டாலேயொழிய அல்லது உதாரணமாக நிரந்தர உத்தியோகத்தராயின் அது தொடர்பான விதிமுறைகளுக்கமைய.

பிரதமர் பதவியென்பது இவ்வாறான சாதாரண உத்தியோகம் அல்ல. பிரதமர் பதவிக்குள்ள ஒரே தகமை பாராளுமன்றப் பெரும்பான்மையாகும்.

பெரும்பான்மை இருப்பதாக கருதி நியமித்த ஜனாதிபதி, தற்போது பெரும்பான்மை இல்லையெனக் கருதி நீக்கமுடியாதா? இங்கு முக்கியம் ஜனாதிபதியின் அபிப்பிராயமே தவிர பெரும்பான்மை இருப்பதற்கான நிறுவல் அல்ல.

எவ்வாறு ஒருவரை பிரதமராக நியமிக்கும்போது பெரும்பான்மையை நிறுவ வேண்டியது அவசியமில்லையோ அதேபோல் நீக்கும்போது பெரும்பான்மையின்மையை நிறுவ வேண்டிய அவசியமுமில்லை. பெரும்பான்மையில்லாத ஒருவரை பிரதமராக நியமிக்கும்போது எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரை நீக்கலாம். அது வேறுவிடயம்.

பிரதமர் ஜனாதிபதி தன்னை நீக்குவதைத் தடுக்கமுடியுமா?
———————————————————
ஜனாதிபதி அவ்வாறு தன்னை நீக்குமுன் பாராளுமன்றில் பிரதமர் மீது நம்பிக்கைப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து பெரும்பான்மையை நிருபித்தால் அதன்பின்பு ஜனாதிபதி பிரதமருக்கு பெரும்பான்மை இல்லை; என்ற அபிப்பிராயத்தைக் கொள்ளமுடியாது. எனவே, பிரதமரை நீக்கமுடியாது. மீறி நீக்கினால் அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாகும்.

அவ்வாறு மீறினால் 19 வது திருத்தத்தின்படி உயர்நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் இது பாராளுமன்றம் சம்மந்தப்பட்டதால் அதை உயர்நீதிமன்றம் எவ்வாறு பார்க்கும்; என்று எதிர்வுகூற முடியாது. இவ்வாறான ஒரு வழக்கு இதுவரை வந்ததில்லை. அதேநேரம் இதற்குரிய தீர்வு பாராளுமன்றத்திடம் இருப்பதால் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை ஏற்படாது. மறுபுறம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதற்காக ஜனாபதிக்கெதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

பதவிநீக்கத்தைத் தடுப்பதற்கு பிரதமருக்கு இன்னொரு வழியும் உண்டு. அதுதான் பெரும்பான்மை அங்கத்தவர்களின் தனக்கு ஆதரவான கையெழுத்தைப் பெற்று ஜனாதிபதியிடம் கையளிப்பது. இதற்கென்று அரசியலமைப்பில் சரத்தேதும் இல்லை. ஆனால் அவ்வாறு சமர்ப்பித்தால் அதன்பின் பிரதமருக்கு பெரும்பான்மையில்லை; என்ற அபிப்பிராயம் கொள்ளமுடியாது. அவ்வாறாயின் அந்த கையொப்பங்களின்  நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

பிரதமரை நீக்கியதன்பின்
———————————
எந்தவகையிலேனும் பிரதமரை நீக்கினால் அடுத்த கட்டம் என்ன? நாலரை ஆண்டுகள் முடியும்வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதி சுயமாக கலைக்க முடியாது. எனவே, புதிய பிரதமரை அவர் நியமிக்கலாம். நடைமுறையில், பிரதமர்  நியமிக்கப்படுகின்றபொழுது அவருக்கு பெரும்பான்மை தேவையில்லை; ஜனாதிபதிக்கு பெரும்பான்மை இவருக்கு இருக்கின்றது; என்ற அபிப்பிராயம் போதும். இதைத்தான் 2004ம் ஆண்டு சந்திரிக்கா செய்தார், பெரும்பான்மை இல்லாதபோதும்.
 அடுத்து,

எதிரணியிடம் பெரும்பான்மை இருந்தால் அந்தப் பிரதமரை பதவியிழக்கச் செய்யலாம். ஜனாதிபதி முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சுப்பதவி, பிரதியமைச்சுப்பதவிகளுக்கு ஆசைகாட்டி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குமுன் தன்பக்கம் கவரலாம். 2004ல் சந்திரிக்கா கையாண்ட கலை. ( அப்பொழுதும் பிரதமர் நியமிப்பில் இதே சரத்துத்தான் இருந்தது).
இறுதியில் இது ஒரு எண்ணிக்கைப் போட்டியாகும்.

களநிலை
—————
ஐ தே கட்சியிடம் 107 இருக்கின்றது (மு காவின் ஒற்றை ஆசனம் உட்பட). UPFA இடம் 96, டக்ளசிடம் 1. மிகுதி TNA மற்றும் JVP யிடம் இருக்கின்றது.

UPFA என்பது மைத்திரியிடமும் மஹிந்தவிடமும் பிரிந்திருக்கிறது. ஒன்றுபட்டால்கூட பெரும்பான்மை வராது.  எனவே ஆகக்குறைந்தது 20 ஆசனங்கள் ஐ தே கட்சியிலிருந்து மைத்திரியோ, மஹிந்தவோ பிரித்தெடுக்க வேண்டும். சாத்தியப்படுமா? அவ்வாறு சாத்தியப்பட்டாலும் எவ்வளவு காலத்திற்கு?

மஹிந்தவின் காலை மைத்திரி எப்போது வாருவார்? மைத்திரியின் காலை மஹிந்த எப்போது வாருவார்? இருவரில் ஒருவருக்கு இந்த முயற்சி அரசியல் தற்கொலை.

அதேநேரம், கற்பனைகூட செய்திராத ஜனாதிபதிப்பதவி மைத்திரிக்கு கிடைத்ததற்குக் காரணம் ரணிலும் ஐ தே கட்சியும். ஏற்றிவிட்ட ஏணியை உதைக்க நினைப்பது அவருக்கு தர்மமாகாது. ஆனால் அரசியலில் தர்மத்தை எதிர்பார்க்கவும் முடியாது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய