Skip to main content

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு

   ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள

சமூகத்தின் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்க பின்நிற்கமாட்டோம்’


மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்திருமலையில் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு-
சமூகத்தில் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, வாளாதிருக்கமாட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெளி, கந்தளாய், தம்பலகாமம்ஆகிய இடங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அக்கூட்டங்களில் மேலும் உரை நிகழ்த்துகையில்,
வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அகதியாக இருந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இன்று இறைவனின் உதவியால் ஒரு கட்சியின் தலைவனாக வந்தவன் என்ற அடிப்படையில், இந்த சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கின்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை நன்கு அறிவேன். உங்களது கவலைகள், உங்களது எதிர்பார்ப்புக்கள், ஒரு கட்சியிடமிருந்து தலைவரிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை இறைவன் எனக்கு அறியத் தந்திருக்கின்றான்.
ங்களைப் போலவே நானும் மறைந்த தலைவர் அஷ்ரஃபின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டே இந்த அரசியலுக்கு வந்தேன். ஆனால், அவருக்குப் பிறகு அந்த தலைமைத்துவ பதவியை ஆசைப்பட்டு வாயால் கேட்டு வாங்கிக் கொண்ட றவூப் ஹக்கீம், இந்த 17 வருடங்களாக என்ன செய்திருக்கின்றார்? என்பதை நீங்களே திரும்பிப் பாருங்கள். ஹக்கீம் கடந்த காலத்தில் செய்தவற்றை திரும்பிப் பார்த்தால் இந்த சமூகமும், குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட கட்சியும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமைகளே இருக்கின்றன.
இந்த சமூகத்தின் விடுதலை வேட்கையோடு இருக்கின்ற இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்திற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக, மறைந்த தலைவரால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக விடுதலை இயக்கம் எதற்காகவெல்லாம் அடகு வைக்கப்பட்டது,எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்து இன்று மூத்த போராளிகள் கவலையும் விசனமும் அடைந்தவர்களாக எமது கட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள், அபிலாஷைகள் இருக்கின்றன. காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. உங்களது காணிகளை வேறு தரப்பினர் உரிமை கொண்டாடுகின்ற நிலைமைகள் உள்ளன. சில இடங்களில் உங்களது எதிர்கால இருப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதை நாமறிவோம். விவசாயம் சார்ந்த பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் இருக்கின்றன.
சில இடங்களுக்கு வீதிப் போக்குவரத்து இல்லை. பல இடங்களில் பாலங்கள் அமைக்கப்படாமல் மக்கள் இடுப்பளவு தண்ணீரில் பயணம் செய்ய வேண்டிய நிலையிருக்கின்றது. திருகோணமலையில் துறைமுகம் இருந்தாலும் எத்தனையோ தொழிற்சாலைகள் இருந்தாலும் படித்த இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பில்லை. இதனால் எத்தனையோ குமர் பிள்ளைகள் இன்னும் திருமணம் முடிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர்.
இதில் எந்தப் பிரச்சினையையும் நீங்கள் காலாகாலமாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸோ, ஏனைய கட்சிகளோ தீர்த்து வைக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. வீதிகளில் பயணிக்கும் போது தாய்மார்களும், இளைஞர்களும் என்னை வழிமறித்து தமது தேவைகள் நிறைவேற்றப்படாமை குறித்து கண்ணீர்விட்டு அழுவதை பார்க்கின்ற போது, வெற்றுக் கோஷங்களால் இந்த மக்கள் காலாகாலமாக ஏமாற்றப்பட்டும் பேய்க்காட்டப்பட்டும் வந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.
உங்களுக்கு என்னைப் பற்றியும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பற்றியும் நன்கு தெரியும். முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம் நடக்கின்ற போது பேருவளையில், ஜின்தொட்டையில் முதலில் குரல் கொடுப்பது எந்த தலைமை என்பதை நீங்கள் அறிவீர்கள். இனவாதிகள் ஒருபோதும் றவூப் ஹக்கீமை தாக்கிப் பேசுவதில்லை என்பதுடன் என்னைத்தான் முஸ்லிம் இனவாதியாக சித்தரிக்க முற்படுகின்றார்கள். ஏனென்றால்சிறுபான்மை சமூகத்துக்காக எதனையும் துணிந்து பேசுகின்ற காரணத்தினாலேயே என்பதை எனது மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
நாங்கள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு புறம்பாக எந்தக் காரியத்தையும் மேற்கொள்ளவில்லை. மஹிந்தவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தபால்மூல வாக்களிப்பு முடிவடையும் வரை அந்தப் பக்கம் இருந்து விட்டு இந்தப் பக்கம் ஓடிவந்தவர்களும் அல்லர். எந்த முடிவையும் அல்லாஹ்வைப் பயந்து துணிச்சலாக எடுப்பதில் நானோ எமது எம்.பி.க்களோ என்றும் பின்வாங்கிய வரலாறு கிடையாது.

இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தனித்து மயில் சின்னத்திலும், ஏனைய சமூகங்கள் வாழும் இடங்களில் இனநல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றோம். ஆனால், எந்தப் பெரிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் இந்த சமூகத்தின் அடையாளத்திற்கும் தன்மானத்திற்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது அதற்கு, எதிராக முதலில் எழுகின்ற குரல் எமது குரலாகவே இருக்கும். இதில் எந்த விட்டுக்கொடுப்புக்களும் இல்லை.
எனவே, நீங்கள் எத்தனையோ வருடங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கும் வேறு கட்சிகளுக்கும் வாக்களித்து ஏமாறியிருக்கின்றீர்கள். நான் உங்களிடம் கேட்பது, எமக்கு இம்முறை ஒரு வாய்ப்பை தந்து பாருங்கள். அது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் செய்கின்ற பெரும் உபகாரமாகும். உங்களை ஏமாற்றியவர்களுக்கு இந்த தேர்தலில் ஒரு பாடம் புகட்டுங்கள் என்றார்.


Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313