Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

மனோ கணேசனுக்கு சிறப்பானதொரு அமைச்சர் பதவி


நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது 
மனோ கணேசனுக்கு சிறப்பானதொரு அமைச்சர் பதவி
கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அவசர வேண்டுகோள் 

நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான திரு. மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக் கூடியதான சிறப்பானதொரு அமைச்சரவை அமைச்சர் பதவியை கூட்டு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. 
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற மிகவும் முக்கியமான பிரதான காரணகர்த்தாவாக விளங்கியவர். அவரது பாரிய பங்களிப்புக் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றது என்பதனை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என முழு நாட்டு மக்களுமே நன்கறிவர். ஆனால் அவரது நல்லெண்ணத்திற்கும், நாட்டின் அமைதிக்காக அவர் முன்னெடுத்த பாரிய முயற்சிக்கும் கடந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியானது எவ்வகையிலும் பொருத்தமற்றது ஒன்றாகவே நாம் கருதுகின்றோம் என மன்றத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 
நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு எதிராக நின்று செயற்பட்டதுடன், தமிழ் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், திரைமறைவிலும்  எதிராகச் செயற்பட்டவர்களுக்கும் தமது சமூகங்களை உயர்நிலைப்படுத்தவும், தமது சமூகத்தவர்களுக்கு விரும்பியவாறு வேலை வாய்ப்புக்களை வழங்கவும், தமது சமூக மக்கள் வாழும் பிரதேசங்களை விரும்பியவாறு அபிவிருத்தி செய்யவும் தேவையான வளங்களையும், வசதிகளையும் கொண்ட அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. இது மிகவும் வேதனை தந்த விடயமாக அமைந்திருந்தது. இதனை இனி மாற்றியமைக்க வேண்டும். அது தமிழ் மக்களது பொறுப்பும், கடமையுமாகும்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களை மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களையும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நன்கறிந்து அதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது செயற்பட்டு வந்த திரு. மனோ கணேசனின் செயற்பாடுகள் ஒரு சிறு குறுகிய வட்டத்தினுள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருந்ததாகவே கொழும்பு இந்து இளைஞர் மன்றம் கருதுகின்றது. இதனை இனிமேலும் பொறுமையுடன் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும்.
தகுதியில்லாதவர்களுக்கும், தமிழர்களை அடக்கி அடிமைகளாக வைத்திருக்க முயல்பவர்களுக்கும் தமிழர் பிரதேசங்களில் அதிகூடிய அதிகாரங்களை வழங்கி தமிழர்களை அடக்க முனைவதை இனியும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தாம் ஆட்சியமைக்கவும், தமது எதிரிகளை துவம்சம் செய்து அதிகாரங்களைக் கைப்பற்றவும் திரு. மனோ கணேசனையும் அவருடன் சார்ந்தவர்களையும் கறிவேப்பிலை போன்று தேவைக்குப் பயன்படுத்திவிட்டு அமைச்சுக்களின் அதிகாரப் பகிர்வின்போது கண்டு கொள்ளாமலிருக்கும் பெரும்பான்மையின சிந்தனைக்கு இனியும் இடமளிக்க முடியாது. 
நல்லாட்சி அரசாங்கம் அமைந்து தமிழர் நிம்மதியாக வாழ்ந்தால் அது மட்டுமே தனக்குப் போதுமானது என நினைத்து தனக்கு கிடைக்கவிருந்த பல உயர் பதவிகளைப் பலர் திட்டமிட்டுத் தடுத்தபோதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி மூலமாக தனது பிரத்தியேகமான தனக்கே உரிய பாணியில் பலவற்றைச் செய்துவரும் திரு. மனோ கணேசனின் உயரிய பண்புக்கு முன்னால் அவருக்கு நல்லது நடக்கக்கூடாது என நினைத்துச் செயற்படும் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். 
எனவே ஆட்டம் கண்டு மீண்டும் ஆட்டம் காணாது தொடரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் திரு. மனோ கணேசனுக்கு உரிய அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் கொழும்பு இந்து இளைஞர் மன்றம் உறுதியாக உள்ளது. அவ்வாறு இடம்பெறவில்லையாயின் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவும் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திற்கு நன்கு தெரியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மக்களது ஆணையை தேர்தல் மூலமாக நேரடியாகப் பெறாது தேசியப் பட்டியல் மூலமாக அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதனை வெறுமனே கௌரவப் பதவிகளாக நினைத்து எவ்விதமான மக்கள் சேவையும் புரியாது பதவிகளை  கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் சிலர் மத்தியில் மக்களது பெரும் ஆதரவைத் தாம் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது அரசாங்கத்திற்கும் அதனைச் சார்பாகப் பயன்படுத்தி தமிழரின் பெருந்தன்மையை அவர்களுக்குப் புரிய வைத்துவரும் திரு. மனோ கணேசன் போன்ற உண்மையான தகுதியுடைவர்கள் அதற்குரிய கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் கோரிக்கையாகும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய