Skip to main content

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா?

 ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!  - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த

யாழ் மாநகரசபைக்கான 13 ஆம் வட்டாரத்தில்

   பாறுக் ஷிஹான்


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தினம் நெருங்கிக்கொண்டு தான் இருக்கின்றது  ஆம்   எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி  நடைபெறவுள்ள இத் தேர்தலில் யாழ் மாநகரசபைக்கான 13 ஆம் வட்டாரத்தில்  முஸ்லீம் உறுப்பினர் ஒருவரை பெறுவதற்காக கட்சிகள் மும்முரமாக தமது வேட்பாளர்களை இறக்கியுள்ளன.இந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி மற்றும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு  சார்பாக தத்தமது வேட்பாளர்களை இறக்கியுள்ளதுடன்     உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்காக கடுமையாக போட்டிபோடுகின்றனர்.


இத்தேர்தலில் 13ம் வட்டாரத்தில் ஜே-87 ஜே-88 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாக சுமார் 1300க்கு அதிகமான தமிழ் பேசும் வாக்காளர்களை கொண்டுள்ளதுடன் மக்களும் தேர்தல் செயற்பாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு காணப்படுகின்றனர்.


 இத்தேர்தல் தொடர்பிலான  இந்த மக்கள் தமது கருத்துக்களை ஊடகங்களிற்கு தெரிவிக்கையில்01)  முஹமட் யூசுப் தாஹீர்(வயது-54-நெசவாளர்-புதிய சோனகத்தெரு)கடந்த காலங்களில் எமக்கான  தலைமைத்துவம் சரியாக அமையாத  காரணத்தினால் வாழ்வாதார தொழில்களில் ஆர்வத்துடன்  ஈடுபட முடியவில்லை.எனினும் எமது யாழ் மக்களை கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் சேவை செய்து கொண்டிருக்கும்  சமூக சேவகர் நிலாமிற்கு தான் எனது ஆதரவு.தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எமது பகுதியில் எவ்வித ஆதரவும் கிடைக்காது.காரணம் அவர்கள் எம்மை துரோகிகளாகவே இன்று வரை பார்க்கின்றனர்.02)  நிஸாத் நிஸார்(வயது-24)சுயதொழில் முயற்சியாளர்- பொம்மைவெளி)
உறுதியான  அரசியல் அதிகாரத்தின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி யாழ் முஸ்லீம்கள் விடயத்தில் அக்கறை காட்டுகின்றது.எமது மக்களது அடிப்படை விடயங்களில் ஒன்றான வீட்டுத்திட்டம் மீள்குடியேற்றத்தில் பல நடவடிக்கைளை எடுத்துள்ளது.பள்ளிவாசல் புனர்நிர்மாணத்தில் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது.எனவே இக்கட்சி ஊடாக போட்டியிடும் சமூக சேவகர் கே.எம் நிலாமிற்கு எமது பகுதியில் அதிகளவு ஆதரவு வழங்கவுள்ளோம் என்பதை கூற விரும்புகின்றேன்.


03) ஜெயிலாப்தீன் நிபாகிர் முஹமட் (சுயதொழில் முயற்சியாளர் )இத்தேர்தலானது  எமது யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை சம்பந்தமானது.1990 ஆண்டு இடம்பெயர்ந்து நான்  மீண்டும் 2009 ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடும்பத்துடன் மீளக்குடியமர்ந்து இன்று வரை வாழ்ந்து வருகின்றேன்.கடந்த காலங்களில் எமது மக்களிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை.செய்ய போறதும் இல்லை.நொந்து போயுள்ள எமது மக்களை தொடர்ந்து அவர்களில் சிலர் பகடைக்காயாக வைத்து ஏமாற்ற பார்க்கின்றார்கள்.இந்த செயற்பாடு யாழ் முஸ்லீம்களிலிடம் எடுபடாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி எமது ஆதரவு உள்ள சக்தி.அதற்காக இன்று மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.04) சுல்தான் சப்றாஸ் (அங்காடி வியாபாரி )


யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அதிகாரங்கள் எமது அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களே தொடர்ச்சியாக பெற்றுத்தருகின்றார்.அவர் சார்ந்த கட்சிக்கே எமது ஆதரவு என உறுதியாக கூறுகின்றேன்.


05) நெய்னாமுகமட் செய்னம்பு (இல்லத்தரசி )ஜே-87 கிராம சேவகர் பிரிவு கடந்த காலங்களில் யாழ் முஸ்லீம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினார்கள்இம்முறை அது நடக்காது.சகோதரர் கே.எம் நிலாம் யானை சின்னத்தில் இம்முறை போட்டி இடுகின்றார்.அவரை நான் உட்பட எனது குடும்பம் ஆதரிக்கின்றோம்.காரணம் இங்கு வெள்ளம் முதலில் வந்தால் இச்சகோதரர் முதலில் எமக்காக குரல் கொடுத்துஉதவிகளை செய்வார்அவருக்கே எமது வாக்குஇது யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஆதரவினை தெரிவித்துள்ளோம்.


06) அப்துல்ரஹ்மான் பாதிமா (இல்லத்தரசி ) பொம்மைவெளியாழ்  மாநகரசபையின் முஸ்லீம் மக்களிற்கு   மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது. நாங்கள் இதனை எமது  உரிமைக்கான தேர்தலாக மட்டும் பார்ப்பதனால் தம்பி சமூக சேவகர் நிலாம் தெரிவு செய்யப்பட வேண்டும்.அன்று தொடக்கம் இன்று வரை யாழ் முஸ்லீம் மக்களிற்காக தன்னை அவர் அர்ப்பணித்தவர்இன்று இந்த இடத்தில் நான் குடியேறி 7 வருடங்களாக வாழ இவர் தான் காரணம்


07)கமலேஸ்வரன் மகேஸ்வரன்-வயது-51 ( ஜின்னா வீதி)எமது மக்கள் முன்னரை விட முட்டாள்கள் அல்ல.அதை அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் சேவை மனப்பான்மை உள்ள ஒருவரை தான் தெரிவு செய்வார்கள்.13 ஆம் வட்டாரத்தை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தான் மக்கள் ஆதரவு அதிகம் இருக்கின்றது.காரணம் அதில் உள்வாங்கப்பட்டுள்ள வேட்பாளர் தான் காரணம்.எனது ஆதரவும் சமூக சேவகர் நிலாம் அவர்களுக்கு தான் .


08)சாகுல் ஹமீட் மர்சூக்-வயது-51 (வியாபாரி) வடக்குச்செயலணி  ஊடாக யாழ் முஸ்லிம்களிற்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றன.இதற்கு தொடர்ச்சியாக ஆதரவினை வழங்கினால் எமது பகுதி அபிவிருத்தி செய்யப்படும்.இதற்காக பாடுபடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாட் பதியுதீனின் வேட்பாளர் நிலாமினை ஆதரிப்பதன் ஊடாக நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.


09)முஹமட் சர்ஜுன் -வயது-29 (சுயமுயற்சியாளர்)


எதிர் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது ஆதரவு ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தான் என்பதை தெரிவிக்கின்றேன்.ஏனேனில் யுத்த்தினால் இடம்பெயர்ந்த என்னை போன்ற முஸ்லீம் மக்களிற்கு மறுவாழ்வு கொடுத்து மீள்குடியேற்றம் செய்தமையாகும்.அத்துடன் அக்கட்சி சார்பாக போட்டியிடும் சமூக சேவகர் எமது மக்களில் எவ்வாறான அக்கறை உள்ளவர் என்பது ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களிற்கு தெரியும் .


10)மர்லீன் செயிலாப்தீன் -  (வியாபாரி )ஜே-86 கிராம சேவகர் முஸ்லீம் வட்டாரம்யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதி  அதிகமாக     புனரமைக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தலைவரும் அமைச்சருமான   ரிஷாத் பதியுதீனின்  முயற்சியினால்  மீள் குடியேற்றத்துக்கான விஷேட செயலணி ஊடாக அது நடைபெறுகின்றது.நாம் இப்பகுதியில் மீளக்குடியேற உதவியவர் கௌரவ அமைச்சர் மற்றும் சகோதரர் கே.எம் நிலாம் .எனவே இத்தேர்தலில் எமது ஆதரவு இவர்களிற்கு தான் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.


11)ஹசன் குத்தூஸ் நஸ்ரூதீன் -  (வியாபாரி )


  எமது பிரதேசத்தில்  அபிவிருத்தி செய்யப்படாமலிருக்கும் பகுதிகளை  அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியம் தற்போது உள்ளது.இதற்கு சரியான நபர் சமூக சேவகர் கே.எம் நிலாம்.(பண்ணையார் ) நீண்டகாலம் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள்  குடிநீர் இல்லாமலும்  போக்குவரத்து வசதிகள் இல்லாமலும் இருந்த வேளை தன்னாலான பங்களிப்பினை அதிகாரம் இல்லாமல் பெற்றுகொடுத்தவர் .இதனால் அவருக்காக அதரவு தற்போது எம்மை போன்ற மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க கடமைப்பட்டுள்ளனர்.12)மீரான் முகைதீன் நஸிம் -  (சுயதொழில் முயற்சியாளர் )எம்மை இனச்சுத்திகரிப்பு செய்வதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக  திட்டம் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் குறித்த தேர்தலில்    சிந்தித்து வாக்களியுங்கள் என உரிமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன் .ஏனேனில் இத்தனை காலமும் எம்முடன் இருந்து பல சேவைகளை எமக்காக செய்பவர் கே.எம் நிலாம் அவர்கள்.இன்ஷா அல்லாஹ் அவருக்கு யாழ் முஸ்லீம்கள் அனைவரதும் ஆதரவும் கிடைக்கும்13)யாசீன் நைமா -  (இல்லத்தரசி )வயது-67எமது பெண்கள் இன்று சுயதொழில் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இதற்க காரணம் அமைச்சரின் றிசாட் பதியுதீன் அவர்கள்.இவரது தையல் பயிற்சி நிலையத்தின் ஊடாக பல முஸ்லீம் யுவதிகள் பலன் பெற்றுள்ளனர்.தம்பி நிலாம் இம்முறை அமைச்சரின் ஆசிர்வாதத்துடன் தேர்தலில் இறங்குகின்றார்.அவரை நாங்கள் வெற்றி பெற வைப்போம்.
14)  முஹமட் றிஸ்னாஸ்(வயது-41)-சுயதொழில் முயற்சியாளர்-கல்லூரி வீதி)


எமது மக்கள் கடந்த கால யுத்த நிலைமையினால் இடம்பெயர்ந்து தற்போது 8 வருடங்களாக மீள்குடியேறி வருகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிலர் தங்கள் அரசியல் உத்திக்காக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ளார்கள்.எமது தலைவர் றிசாட் பதியுதின்அவர்கள்  அண்மையில் தெரிவித்ததன் படி சுமார் 300 வீடுகள் மிக விரைவில் கட்டப்பட இருக்கின்றது.எதிர்காலத்தில்  எங்கள் இளைஞர் யுவதிகளுக்கு  வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதுஅது போன்று இளைஞர்களது நீண்ட  கால கனவுகளை தற்போது  நிறைவேற்றி  தேசிய தலைவர் றிசாட் பதியுதீன் அவர்கள் போன்று சகோதர் நிலாம் நடவடிக்கை எடுத்து வருகின்றார் .எனவே  யாழ்ப்பாண முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் அவரை ஆதரிப்பதற்கு காரணம் இதுவே.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய