ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
எனது இந்த கட்டுரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவானதோ அல்லது எதிரானதோ அல்ல. மாறாக தன்னம்பிக்கையுடன் அரசியலில் இறங்கி உள்ள ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனுக்கும் சமர்ப்பனம்.
காட்டில் பல மிருகங்கள் இருக்கின்றன யானை எது? மயில் எது?? குதிரை எது??? இவைகளின் குணம் என்ன ? எது! எப்போது! எவ்வாறு! நடந்து கொள்ளும் என்று தெரிந்து கொண்டே... யானையின் தும்பிக்கையின் கீழ் சென்று செல்பி எடுத்து செத்துப் போய்ட்டு..., அப்புறம் வந்து..... நம்பிக்கை வைத்திருந்தோம், தும்பிக்கையால தூக்கி போட்டு மிதிச்சிட்டு என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. தெரிந்து கொண்டே தலையை விட்டது..... யாருடைய தப்பு? தூக்கி போட்டு மிதிச்ச யானையோட தாப்பா? இல்லை நம்பி கெட்ட நம்முடைய தப்பா???
கட்சி, சின்னம் என்று கட்டி பிடித்து அழுதது போதும். இம்முறையாவது சிந்திப்போம்..... எமது சானக்கிய தலைவரே கூறுகிறார்... மிகவும் அழகாகவும், தெழிவாகவும்.. "கிழக்கில் எமக்கு சின்னம் முக்கியமில்லை எண்ணம் தான் முக்கியம். சின்னம் அது ஆனையோ அல்லது மரமோ அதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை எண்ணத்தை பாருங்கள்" என்று . நானும் அதைதான் சொல் கின்றேன். எமது எண்ணம் நமது ஊருக்கு சேவை செய்ய கூடிய சமூக அக்கறை உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அவர்கள் என்ன சின்னத்தில் ஆவது இருந்து விட்டு போகட்டும். கவலையில்லை. தலைவர் சொல்வது போல்
"சின்னம் முக்கியமில்லை, எண்ணம் தான் முக்கியம்"
நாம் ஒவ்வொரு முறையும் தெரிவு செய்து அனுப்பிய நமது அரசியல் தலைவர்கள் ஆயோக்கியர்கள் என்றால், நமது சமூகத்தை பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் என்றால்! காலம் காலமாய் தெரிவு செய்து அனுப்பி கொண்டிருக்கின்ற நாம் யார்??? முட்டாள்களா???? இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம்மிடம், நாமே கேட்டு கொள்ள மறந்து விட கூடாது.
"மறந்தும்கூட மரத்தை தவிர வேறு எதுக்கும் கிறுக்க என் விரல்கள் இதுவரை என்னை அனுமதித்ததே இல்லை அதன் மேல் நான் கொண்ட பாசம்"
இத்தனை நாளாய் நானும் முட்டாள் ஆகத்தான் இருந்திருக்கின்றேன், என்பதற்காக இதற்கு மேலும், அவ்வாறே இருக்க வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை.
நமது முக்கியமான பிரச்சினை என்ன தெரியுமா??? யாரையும்... நம்ம.... நம்ப... தயார் இல்லை. அதாவது புதிதாக வருகிற ஒருத்தனை நம்பி தெரிவு செய்ய பயப்புடுகிறோம், ஆனால் காலம் காலமாய் ஒரே கம்பால அடி வாங்கி கொண்டே இருக்கீன்றோம். அப்புறம்...... எல்லாத்தையும் மறந்தும் போயிடுறம். நமது மிகப் பெரிய பலகினமான மறதியை பலாமாய் ஆக்கி கொள்கிறார்கள்... சில அரசியல் அயோக்கியர்கள்.
புதிதாக வருகின்ற, சமூக அக்கறை உள்ளவர்களுக்கும் ஒருமுறை இடம் கொடுத்து தான் பாற்போமே.
ஆனால் ஒன்று மட்டும் சொல்கின்றேன் நன்றாக விளங்கி கொள்ளுங்கள்
" எல்லாமே இருந்து கொண்டு ஒருத்தன் நிக்கின்றான் என்றால் உதாரணமாக அரசியல் பலம், மக்கள் பலம், பண பலம் இவைகளை வைத்துக் கொண்டு ஒருத்தன் நிக்கின்றான் என்றால் அவனை தன்னம்பிக்கையாளன் என்று சொல்லிவிட முடியாது,.
இவைகள் எதுவுமே இல்லை! ஆனால் ஒருத்தன் நிக்கின்றான். என்றால் அவன்தான் தன்னம்பிக்கையாளன்"
ஒரு தன்னம்பிக்கையாளன் தான் ஒரு சிறந்த தலைவனாக இருக்க முடியும், அவனால் தன் மக்களை செரியான முறையில் வழி நடத்தவும், உரிமைக்காக போராடவும், சிறந்த சேவைகளை செய்யவும் முடியும். இவ்வாறான தன்நம்பிக்கையாளர்களை இனம் கண்டு அவர்களை ஆதரித்து அவன் சார்ந்த கட்சிக்கு வாக்குகளை வழங்குவோம்.
அவன் மயிலோ, குதிரையோ, யானையோ அல்லது கெலிகப்டரா என்று பாராமல் ஒரு தன்னம்பிக்கையாளான? ஆயிரம் எதிர்ப்புகள் வந்த போதும், சொல் அடி கல் அடி, அவமானங்கள் போன்றவற்றை தாண்டி ஒருத்தன் நிக்கின்றான் என்றால் அவனை அல்லது அவன் சார்ந்த கட்சியை ஆதரிப்போம்.
இவன்,
சேகு இஸ்மாயில் முகம்மது அர்ஷாத்,
பொருளாளர். உலமா கட்சி.
மருதமுனை.
Comments
Post a comment