BREAKING NEWS

சாணக்கியமும், நமக்கு கிடைத்த பாக்கியமும்..!

சாணக்கியமும், நமக்கு கிடைத்த பாக்கியமும்..!


மு.காங்கிரஸின் தலைமை பதவியை ஏற்றுக்கொண்டதன் பின் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்காக சாதித்த சாதனைகள் ஏறாலமானது அதுலே சில...

2002ம் ஆண்டு சந்திரிக்காவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய ஹக்கீம் அவர்கள் ரணிலின் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார். அந்த நேரத்தில் புலிகளுக்கு எதையாவது கொடுத்துவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த ரணில் அவர்கள், அன்று நோர்வேயின் அனுசரணையோடு ரணில் பிரபா ஒப்பந்தத்தை செய்திருந்தார்.

அந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களை "சிறு குழுக்கள்"என்று எழுதியது மட்டுமல்ல யுத்த நிறுத்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக புலிகளினால் ஏதாவது தாக்குதல் நடந்தால் அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பதென்று எதுவுமே அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல் நயவஞ்சகத்தோடு  நடந்துகொண்டார் அன்றய பிரதமர் ரணில் அவர்கள்.

அதன் பிற்பாடு புலிகளினால் முஸ்லிம்களுக்கு  நடந்த கொடுமைகளை சொல்லில் வர்ணிக்கமுடியாது. மூதூர் மக்களை குதரித்தள்ளியது மட்டுமல்ல, வாழைச்சேனையில் இரண்டு மையத்துக்களை ரோட்டிலே போட்டு பெற்றோல் ஊற்றி பற்றவைத்த வரலாறுகளையும் நாம் அறிவோம்.
அதே போன்று  கல்முனை நகரை இரவோடு இரவாக புலிகள் ஆயுதபலத்தோடு கொள்ளையடிக்க முயன்றபோது, இதே சாணக்கிய தலைவர் ஹக்கீம் அவர்களுக்கு, இன்றய கல்முனையின் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் உதவிகேட்டு போன் செய்தார்.

அப்போது ஹக்கீம் அவர்கள் பிரதமர் ரணிலிடம் பேசிவிட்டு பதில் சொல்லுகின்றேன் என்றவர் பிறகு ஹரீசிடம் கூறினாராம், பிரதமர் ரணிலிடம் பேசினேன் அவர் இராணுவத்தைக் கொண்டு பாதுகாப்பு தர மறுத்துவிட்டார் என்றும், அப்படி இராணுவத்தைக்கொண்டு பாதுகாப்பு தறுவது ஒப்பந்தத்தை மீறிவிடும் செயலாக மாறிவிடுமாம், அதனால் என்னால் பாதுகாப்புத் தர முடியாது என்று ரணில் கூறிவிட்டார். ஆகவே நீங்கள் நிலைமையைப் பொறுத்து செயல்படுங்கள் என்றாராம் நமது சாணக்கிய தலைவர் ஹக்கீம் அவர்கள். அப்போது ஹரீஸ் அவர்கள் பிரதமர் ரணிலுக்கும் ஹக்கீமுக்கும் சபித்து ஏசிவிட்டு போனை கட்பண்ணினாராம்.
அதன் பிற்பாடு என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்படிப்பட்ட தலைவன், புலிகள் முஸ்லிம்களின் மேல் பாய்வதைக்கண்டு பொறுக்கமுடியாமல் மூதூருக்கு சென்று சத்தியாக்கிரகம் இருந்தார், ரணில் வந்து இதற்கு பதில் சொல்லும்வரை நான் இதைவிட்டுச் செல்லமாட்டேன் என்று கூறி அங்கே இருந்துவிட்டார். பிறகு ரணிலும் வரவில்லை அணிலும் வரவில்லை, பிறகு யாருக்கும் தெறியாமல் மூதூரை விட்டே ஓட்டம் பிடித்தார் இந்த சாணக்கிய தலைவர்.

அதன் பிற்பாடு 2005லே நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக்க பெறும்பாடுபட்டார் அதனை இறைவன் தடுத்துவிட்டான். அப்படி ரணில் அவர்கள் அன்று ஜனாதிபதியாக தெறிவு செய்யப்பட்டிருந்தால் இன்று பிரபாகரனின் கைகளிலே நாம் மாட்டிக்கொண்டிருப்போம். அந்த நேரம் ரணில் தறுவது காணாது மஹிந்த வந்தால் இதைவிடக்கூடுதலான சலூககைளை அனுபவிக்கலாம் என்று நினைத்த பிரபாகரனின் என்னத்தில் மண்ணைத்தூவி விட்டான் இறைவன். மாறாக மஹிந்தவும் ரணிலைப்போல் புலிகளுக்கு சலுகைகள் வழங்கியிருந்தால் இன்று முஸ்லிம்கள் நாட்டிலே, குறிப்பாக வடகிழக்கிலே நிம்மதியாக வாழ்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமாகத்தான் இருந்திருக்கும்.

இந்த நிலையில்தான் மஹிந்த அவர்கள் 2006ம் ஆண்டு இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரிக்க ஒரு பிரிவினர் வழக்கு போட்டபோது, அதற்கு மஹிந்த அரசு எதிர்ப்புக் காட்டிவிடாமல் பார்த்துக்கொண்டார் முன்னால் அமைச்சர் அதாவுல்லா அவர்கள். அந்த நேரம் இந்த சாணக்கிய தலைவன் எங்கே இருந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.

அதன் பிற்பாடு புலிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றது. (அந்த யுத்தத்தில் மஹிந்தவுக்கு சார்பாக அதாவுள்ளா, பேரிய‌ல், அமைச்ச‌ர் ரிசாத், உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் ஆகியோர் செய‌ல்ப‌ட்ட‌ன‌ர். )
  அந்த நேரம் இந்த சாணக்கிய தலைவன் கழுவின மீனிலும் நழுவின மீனாட்டம் எங்கோ சென்று ஓடி ஒழிந்து கொண்டார்.

இந்த நிலையில்தான் மஹிந்த அவர்கள் 2010ம் ஆண்டு புலிகளை எலிகளாக்கிவிட்டு மக்களிடம் வந்தபோது இந்த சாணக்கிய தலைவன் என்ன நினைத்தாரோ அல்லது யாரிடம் சோரம் போனாரோ தெறியாது, முஸ்லிம் சமூகத்துக்கு ஒன்றுமே செய்யாத இந்த சரத்பொன்சேகாவை ஆதரித்து வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களிடம் வாக்குபிச்சை கேட்டழைந்தார். இதற்கு தக்கபதிலடி கொடுக்க மறுத்த நமது முஸ்லிம் சமூகம் டயஸ்போராக்களினது, சக்தி ரீவினதும், தமிழ் பத்திரிகைகளினதும், மேற்குலகினதும் சதிகளுக்குள் மாட்டிக்கொண்டு, அதன் ஏஜண்டாக வந்த சாணக்கிய தலைவர் ஹக்கீமின் கதையைக்கேட்டு மக்கள்  சரத்பொன்சேகாவுக்கே வாக்குகளை அள்ளிப்போட்டார்கள்.

அந்த தேர்தலில் மஹிந்த வெற்றியடைந்திருந்தார், அதன் பின் மஹிந்தவின் காலைப்பிடித்து பின்கதவால் நுழைந்த இந்த சாணக்கிய தலைவர் மஹிந்த காலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, மாறாக 18வது திருத்தத்துக்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு பிறகு நான் தவறு செய்துவிட்டேன் என்று நாடகமாடினார். அதே போன்று மாகாணசபைகளின் அதிகாரத்தை குறைக்கின்ற சட்டமான "திவிநிகும" சட்டம் வந்தபோது அதற்கும் ஆதரித்து வாக்களித்துவிட்டு பிறகு எனக்கு தெறியாமல் நடந்து விட்டது என்றார்.

இப்படிப்பட்ட சாணக்கிய தலைவர்  2015ம் ஆண்டின் ஆட்சிமாற்றத்தை தனக்கு சார்பாக பயன்படுத்தியது மட்டுமல்ல, அந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராகவும் ஆகிக்கொண்டார். இந்த ஆட்சி வந்ததன் பிற்பாடு முன்னய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த எந்த சம்பவத்துக்கும் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் முயற்ச்சிக்கவில்லை.
தம்புள்ள பள்ளி, கிராண்பாஸ் பள்ளி, பாத்தியா பள்ளி, மஹியங்கனை பள்ளி, அளுத்கமை பிரச்சினை போன்ற எந்த விடயத்துக்கும் இதுவரை சாணக்கிய தலைவர் இன்றுவரை தீர்வை பெற்றுத்தரவில்லை.

இந்தாட்சியிலும் நடந்த அத்தனை வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக பாராளுமன்றத்தில் பேசியதைதத் தவிர வேறெந்த நடவடிக்கைகளையும் இந்த சாணக்கிய தலைவர் எடுக்கவில்லை. அது அப்படியிருக்க இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் இறுப்புக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்து விட்டு பிறகு வந்து மக்களிடம் கூறுவது நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று.

இதுதான் இன்றுவரை இந்த சாணக்கிய தலைவன் முஸ்லிம் சமூகத்துக்கு பெற்றுதந்து கொண்டிருக்கும் சேவைகளாகும். வடகிழக்கு இணைப்பு விடயத்திலும்,புதிய யாப்புத்திருத்த விடயத்திலும், மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் போன்றவற்றிலும்., இப்போதும் நளினப்போக்கையே கடைப்பிடித்து வரும் இந்த சாணக்கிய தலைவரை நம்பி இந்த முஸ்லிம் சமூகம் எப்படித்தான் மீட்சி பெறப்போகின்றதோ என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் ஒரே குரல் நாங்கள்தான் என்றும், முஸ்லிம் சமூகத்தின் ஓட்டுநரும் நாங்களே நடத்துனரும் நாங்களே என்று மக்களிடம் கூறி வாக்குகளை கொள்ளையடித்து செல்லும் போது யாரும் அதனை விமர்சிக்கமாட்டார்கள். அவர்கள் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து சென்றதன் பிற்பாடு முஸ்லிம்களுக்கு ஏதாவது அநியாயங்கள் நடந்தால் நாம் இவர்களை விமர்சிப்போம், அப்போது மு.காங்கிரசை மட்டும்தானா நீங்கள் விமர்சிக்கவேண்டும் என்று போராளிகள் துடிக்கின்றார்கள். அது ஏன் என்றுதான் இதுவரை புரியவில்லை.

ஆகவே இந்த சாணக்கிய தலைவரை தலைமேல் வைத்து கொண்டாடும் போராளிகள் நாளை கியாமத்து நாளில் இதற்க்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar