Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

கிழக்கான் மண்டியிடுபவன்’


– ராஸி முகம்மத் –

‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன்.

‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’

‘ஆளுபவன் அல்ல. ஆளப்படுபவன்’

என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது.

இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலையை உங்களுக்கு வளர்த்துவிட்டது யாருமல்ல. உங்களுக்கு தொழில் கொடுத்து வைத்திருக்கும் உங்கள் எஜமானன்தான்.

மட்டக்களப்பான் மட்டமானவன். ஆளப்பட வேண்டிய சூத்திரன் அவன். ஆளும் பிராமண வர்க்கம் நாம் – என்று, கிழக்கிலங்கை அரசியலுக்குள் பார்ப்பன வன்மத்தைப் புகுத்தியவன் உங்கள் தலைவன்தான். அதன் எதிரொலிதான் உங்கள் வார்த்தைகள்.

கிழக்கான் மலையகத்தான் என்று, அன்று நாங்கள் பிரித்துப் பார்த்திருந்தால் இன்னேரம் உங்கள் தலைவர் கொல்லுப்பிட்டியில் ஐஸ் கிரீம் விற்றுக் கொண்டிருப்பார். அவரால் முடிந்தது அவ்வளவுதான்.

இவனின் மொழி வழக்கு வேறு – எமது மொழி வழக்கு வேறு என்று நினைத்து உங்கள் தலைவரை இந்தக் கிழக்கான் அன்று விரட்டியிருந்தால், நீங்கள் இன்று வெளிநாட்டில் வெற்று ஊதியத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். வோட்ட போட்டில் அல்ல.

எங்கள் பண்பாடு வேறு, இவனின் பண்பாடு வேறு என்று இந்தக் கிழக்கான் நினைத்திருந்தால், குமாரியின் கல்கிஸ்ஸை வீட்டிற்கு வாடகை கொடுப்பதற்குக் கூட உங்கள் தலைவன் தலை கீழாய்த் தொங்கிக்கொண்டிருந்திருப்பான்.

மண் வாசனை வேறு மலை வாசனை வேறு என்று நாங்கள் அன்று நினைத்திருந்தால், உங்கள் தலைவன் கண்டியில் இருந்து கராம்பு ஏற்றிக் கொண்டிருந்திருப்பான்.

கிழக்கான் வேறுபாடு பார்ப்பவன் அல்ல. வந்தாரை வாழ வைப்பவன். கிழக்கின் மத்தியில் முளைத்த மரத்துக்கு, கிழக்குக்கு வெளியே காவற்காரன் இருப்பதே அதற்கு உதாரணம்.

இன்று நீங்கள் இனிக்க இனிக்க சப்புக் கொட்டி பழம் தின்று கொண்டு, விதையையும், தோலையையும் வீசி எறிகிறீர்களே இந்தக் கிழக்கு எனும் உங்கள் குப்பைக் கூடம், அந்தக் குப்பையில் முளைத்த குண்டுமணிதான் இந்த மரம் என்பதை மறந்துவிட்டீர்கள் போலும்.

எல்லா வேறுபாடுகளையும் மறந்து உங்கள் தலைவரை எங்கள் தோளில் சுமந்து மரத்தின் மலர்க் கிரீடத்தை அவர் மண்டையில் ஏற்றி அழகு பார்த்து, எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் காலடியில் சமர்ப்பித்த கிழக்கானுக்கு நீங்கள் கொடுத்த தட்சணை என்ன தெரியுமா?அவனை அரசியல் அநாதையாக்கியது.

கிழக்கான் ஆளத்தகுதியில்லாதவன். ஆளப்பட வேண்டியவன் என்றீர்கள்.

அப்படியென்றால் அஷ்ரப் என்ன மலைநாட்டின் மலையுச்சியில் பிறந்தவனோ?

நீங்களும் உங்கள் தலைவரும் கிழக்கை வைத்துச் செய்து கொண்டிருப்பது அரசியல் அல்ல. ஏற்றுமதி வியாபாரம்.

கிழக்கானின் வாக்கு விளைச்சலையெல்லாம் கிழக்கானை வைத்து விதைத்து, அவனை வைத்தே அறுவடை செய்ததன் பின்னர் ஏற்றியதெல்லாம் உங்கள் தலைவர் கிழக்கு வெளியேதான். அந்த விளைச்சலைத்தான் நீங்கள் வோட்டர் போர்ட்டில் ரசித்து, புசித்து உண்டு கொண்டு உங்கள் காலடிக்கு நாங்கள் வரவேண்டும் என்கிறீர்கள். இதை விட நகைச்சுவை இனி எங்கும் உண்டா?

உங்கள் தலைவர் கிழக்கை வைத்துச் செய்து கொண்டிருப்பது அடிமை வியாபாரம். கிழக்கு மக்கள் தங்கள் அரசியல் தலைமையை பிரதேசம் பாராமல் அவருக்கு கொடுத்த நன்றிக்கடனுக்குத்தான் உங்களைப் போன்றவர்களை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

கிழக்கான் உங்கள் தலைவருக்குப் போட்ட மடிப்பிச்சைதான் அவரின் பதவியும், உங்கள் பதவியும். நம்பிக்கொடுத்த மக்களை நடுவீதியில் கொண்டு வந்து விட்டிருக்கிறார் உங்கள் தலைவர்.

இந்த மட்டக்களப்பான் செய்த மாபெரும் தவறு என்ன தெரியுமா?

அப்பாவிக் கிழக்கானின் அரசியலை மூலதனமாக்கி வயிறு வளர்க்கும், வன் நெஞ்சக்காரனை தலைவானாக்கி அழகு பார்த்ததுதான்.

புலிகளால் வெட்டப்பட்ட வலியை இவன் புரிந்து கொள்வான் என்று நினைத்தது எங்கள் தவறுதான்.

மலை நாட்டில் இருந்தாலும் இடம் பெயர்ந்த மக்களின் இதயத்தை அறிவான் என்று நினைத்தது எங்கள் தவறுதான்.

கடலைக் காணாவிட்டாலும் வலை வீசுபவனின் வேதனை தெரியும் இவனுக்கு என்று நினைத்தது எமது தப்புத்தான்.

வயலைப் பார்க்காதவன் என்றாலும் வாழ்வு தருவான் என்று நினைத்து வலையில் வீழ்ந்தது எங்கள் தவறுதான்.

ஹக்கீம் ஒரு அற்புதமான அரசியல் வியாபாரி என்று, அன்று எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.

கிழக்கை விற்று வியாபாரம் செய்யும், எங்கள் உரிமைகளை ஏலம் விட்டு ஏப்பம் விடும் ஹக்கீம் போன்றவர்கள் உருவாக்கிய அல்லகைகள்தான் நீங்கள்.

ஆனால் சபீக்,

வரம்பறுத்த கிழக்கான் நரம்பறுப்பான்.

புலிக்கே விரளாத மட்டக்களப்பான் இந்தப் பூனைக்கு மருளுவானா?

குண்டடிபட்டுச் சாகாதவர்கள் நாங்கள், உனைப் போன்ற வண்டடிபட்டா சாகப் போகிறோம்.

இது வந்தாரை வாழ வைக்கும் பூமி. வந்து விட்டு உண்ட வீட்டுக்கு இருண்டகம் செய்தவர்களை விரட்டியடித்த பூமியும் இதுதான்.

விதைத்தவனுக்குத் தெரியும் எப்படி வீழ்த்துவது என்று.

இந்த வெள்ளைக்காரன் விரட்டி அடிக்கப்படுவான்.

மரத்தை விதைத்தவனே இனிப் பழத்தைப் புசிப்பான்.

புது யுகம் ஒன்று இனிப் பிறக்கும்.

அப்போது நீ வேர்களோடு புதைந்து போவாய்.

உன் வார்த்தைகளுக்காய் நீயும் வருந்துவாய் .உன் தலைவனும் வருந்துவான்.

இனிப் பொறுத்திருந்து பார் புல்லுருவியே
FB

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய