Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக்காட்டியுள்ளோம்’


-முசலி வேப்பங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்-
-ஊடகப்பிரிவு-
வடக்கில், முசலியில்மறுமலர்ச்சியைஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில்அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு, வேப்பங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கியதேசிய முன்னணியில்போட்டியிடும் வேட்பாளர் பைரூஸின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், வேட்பாளர் அறிமுகக்கூட்டமும் நேற்றுமுன்தினம்(17) வேப்பங்குளத்தில்இடம்பெற்ற போதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
முசலியில் எல்லாப் பிரதேசங்களிலும் நாங்கள் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்று பாராமல் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் உதவியிருக்கின்றோம். கொட்டில்களாக இருந்தவற்றை வீடுகளாக மாற்றியுள்ளோம். காடடர்ந்திருந்த பூர்வீகக்காணிகளை துப்புரவாக்கி பாடசாலை கட்டிடங்களையும், இறைஇல்லங்களையும் உருவாக்கியுள்ளோம். முடியாது என்று கூறப்பட்ட விடயங்களை எல்லாம் அபிவிருத்திகளாக மாற்றி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.
ஆனால், தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பிரதேசத்துக்கு வரும் பொட்டணி வியாபரிகளும், சீசன் வியாபாரிகளும் எம்மை குறைகூறி வருகின்றனர்.
வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறு புலம்புவோர், இந்தப் பிரதேசத்துக்கு ஏதாவது ஒன்றைத்தானும் செய்திருக்கின்றார்களா? அவர்கள் சார்ந்த கட்சியினால் எதைக்கொண்டு வந்து தந்தார்கள்? எவ்வாறான அபிவிருத்தி முயற்சிகளை இந்தப் பிரதேசத்துக்கு மேற்கொண்டிருக்கிறார்கள்? முசலி மண்ணில் மீளக்குடியேறி வாழ்ந்து வரும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏதாவது ஒரு பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுத்திருக்கின்றார்களா? குறைந்தது ஒத்துழைப்பைத் தானும் வழங்கியுள்ளார்களா?உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்டுப்பாருங்கள். எதையுமே செய்யாது வாக்குகளுக்காக மட்டும் இங்கே வந்து அதைத் தருவோம், இதைத் தருவோம் என்று கதை அளக்கின்றனர்.
இவர்களின் ஒரே நோக்கம் இந்தப் பிரதேசத்தில் பணிபுரியும் மக்கள் காங்கிரஸின் தலைமையை பலவீனப்படுத்துவதும், கட்சியின் மக்கள் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்குவதுமே. இதனை நாங்கள் ஒரு சதியாகத்தான் பார்க்கின்றோம்.
பாடல்களும், கோஷங்களும், தனித்துவப் பெருமைகளும், தம்பட்டங்களும் வீர வசனங்களும் உங்களுக்கு ஒருபோதுமே, சோறுபோடப் போவதில்லை. நாங்கள் எந்தக் காலத்திலும் உங்களுடன்தான் இருக்கின்றோம். உங்களுக்கு உதவி வருகின்றோம். எனவே, இவர்களின்வார்த்தைஜாலங்களுக்கு நீங்கள் ஏமாறவேண்டாம். உங்கள் பிரதிநிதித்துவத்தை மண்ணாக்கி விடாதீர்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரடுமுரடான பாதையில் பயணித்து வந்தாலும், எமது இலட்சியம் தெளிவானது. நோக்கம் தூய்மையானது.
எனவே, இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரித்து, முசலிப் பிரதேச சபையை மீண்டும் நாங்கள் கைப்பற்ற உங்கள் வாக்குகளை எமக்குவழங்குங்கள் என்று அமைச்சர்தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச