Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

புதிய தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளும் பாதிப்புக்களும் தேர்தலின் பின்னர் தெளிவாகத் தெரியும்


இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு




உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் அநேகமான உள்ளுராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லாது. இந்நிலையில், புதிய தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளும் - பாதிப்புக்களும் தேர்தலின் பின்னர் தெளிவாக தெரியும்  என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய தேர்தல் முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் தேவையான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்போது மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி, ஊர் வீதி சின்னப்பள்ளி சதுக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

இத்தேர்தலானது அரசாங்கத்தை மாற்றுகின்ற தேர்தலோ அல்லது என்னைத் தோற்கடிக்கின்ற தேர்தலோ அல்ல. எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அதிகாரமிக்க சபையாக காத்தான்குடி நகர சபையை மாற்றுகின்ற தேர்தல்.

தேர்தல் வட்டாரங்களில் தெரிவு செய்யப்படக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தைச் சார்ந்தவராக இருந்தால் மாத்திரமே எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் மாத்திரமே இப்பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயின் மேற்படி அதிகாரங்களை வைத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

காத்தான்குடியில் நாங்கள் கௌரவமான அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். யாரையும் விமர்சிக்காது, யாருடைய தனிப்பட்ட விடயங்களையும் பேசாமல் மிகவும் அழகான முறையிலேயே எமது பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்கின்றோம். எமது வேட்பாளர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு கட்டாயப்படித்தியும் உள்ளோம். அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்மை சீண்டும் வகையில் ‘ஊழல் ஊழல்’ என்று கூறித்திரிந்து மக்கள் மத்தியில் பொய்யான தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முற்படுகிறார்கள்.

எனவே, நாங்கள் எமக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன முன்வைத்துள்ள 20 குற்றச்சாட்டுக்களுக்கும் தெளிவான – ஆதாரபூர்வமான பதிலை வழங்க ஊழல் மாநாடு ஒன்றை நாளையும் நாளை மறுநாளும் (இன்றும், நாளையும்) ஓழுங்கு செய்துள்ளோம். நானே சகலவற்றுக்கும் பதில் அளிக்கவுள்ளேன்.

நாங்கள் எந்த அபிவிருத்திப் பணியை முன்னெடுத்தாலும் அதற்கு எதிராக கோஷம் எழுப்புகின்றவர்கள் இந்த மண்ணுக்கு எதை செய்துள்ளார்கள். ஊர் வீதி அபிவிருத்தி செய்யும் போது அதனைத் தடுக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த சகோதரர்கள் நீதிமன்றம் வரைச் சென்றார்கள். அதேபோன்று, இந்தப் பகுதியில் மைதானமொன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஷிப்லி பாறுக் எம்மை காட்டிக் கொடுத்து அத்திட்டத்துக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியிருந்தார்.

எவ்வாறான தடைகள் வந்தாலும் இப்பிரதேசத்துக்கு நாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 2022 என்ற தூர நோக்கு சிந்தனையுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம். அத்திட்டத்தின் ஊடாக காத்தான்குடி சகல விதத்திலும் பரிபூரணமான நவீன நகரமாக மாற்றியமைக்கப்படும்.

தொகுதிவாரி முறையிலேயே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றப்படும். அந்த யோசனை என்னால் முன்வைக்கப்பட்ட ஒன்றே. இது வேறொரு திருத்தம் கொண்டு வரும் வரை நிலையாக இருக்கும். இந்த ஊருக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் இருந்ததால் தான் எமது ஊருக்கான மாகாண சபை பிரிதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்த வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு, வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிவாரி தேர்தல் முறையானது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் உள்ள அநேகமான உள்ளுராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லாது. ஆட்சியமைக்கும் அதிகாரம் எந்தக் கட்சிக்கும் இல்லாது போகும். கூட்டாட்சி நடத்தும் நிலையே ஏற்படும். அதனால் குழப்பமான, நிலையற்ற சபையாகவே அது இருக்கும். இந்நிலை, காத்தான்குடி நகர சபைக்கு ஏற்பட்டு விடக்கூடாது. – என்றார்


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய