Skip to main content

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா?

 ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!  - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே அடுத்த தேர்தலை சந்திப்பேன்!! ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ்


வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே அடுத்த தேர்தலை சந்திப்பேன்!!
ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

எம்.வை.அமீர்-
கல்முனை மாநகர அபிவிருத்திகள் தொடர்பில் பணிகளை ஆரம்பிப்பதற்கான முதற்க்கட்ட விடயங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் வேலைகளை ஆரம்பிப்பதே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அபிவிருத்தி தொடர்பில் கல்முனை மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பின்னரே தான் பொதுத்தேர்தலை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதேச அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு கல்முனை மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் 2018-01-19 ஆம் திகதி இடம்பெற்றது.
தற்போதிருக்கும் நல்லாட்சிக்கு அதிஉச்ச ஆதரவை வழங்கிய கல்முனை மக்களை கௌரவிக்கும் நோக்கில் சம்மாந்துறை கல்முனை இணைந்த புதிய நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  றவூப் ஹக்கீமின் அமைச்சுக்கு  வரவுசெலவுத் திட்டத்தினூடாக 2000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தினூடாக திட்டங்கள் வரையப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கல்முனையின் மேலதிக அபிவிருத்திக்காக பலத்த முயச்சிகளின் பயனாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியுதவியுடன்  “இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டம்” என்ற செயற்திட்டத்தினூடாகவும் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த செயற்திட்டத்தினூள் கல்முனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதை மிக மகிழ்வுடன் வரவேற்பதாகவும்  இதற்க்காக ஒத்துழைத்த உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்த அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிரி குறித்த அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுதீன்  ஆகியோருக்கும் இந்த திட்டத்தை இங்கு கொண்டுவர அயராது உழைத்த கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி மற்றும் அவரோடு இணைந்த பணியாள் குழாத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
கல்முனையில் இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டத்தை செயட்ப்படுத்துவதற்கு  மிகுந்த உறுதுணையாக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் பிரதம செயலாளருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த திட்டத்தினூடாக
01.    நகர மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல்.
02.   போக்குவரத்து முகாமைத்துவம்.
03.   நகர வடிகாலைமைப்புத் திட்டம்.
04.   திண்மக்கழிவு முகாமைத்துவம்.
05.   பொது கட்டிடங்களையும் சந்தைகளையும் மெருகூட்டுதல்.
06.   சுற்றுலாத்துறையை மேன்படுத்துவதற்கான உட்கட்டமைப்புப் பணிகளை செய்தல்.
07.   உள்ளுராட்சிசபைக்கு உட்பட்ட வீதிகள் பாலங்களை அபிவிருத்தி செய்தல்.
08.   குடியிருப்பு மற்றும் தொழில் நிலையங்களின் உட்கட்டமைப்பு.
09.   கழிவு நீரகற்றல்
போன்ற திட்டங்களுக்கு குறித்த 1900மில்லியங்களும்  பயன்படுத்தப்படவுள்ளன.
அதேவேளை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்துப்பிரிவு ஒன்றை அமைப்பதற்க்கு 1000 மில்லியன் ரூபாய்களும் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்க்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
கல்முனையை விளையாட்டு வசதிகள் கொண்ட நகரமாக மாற்றும் திட்டத்தின்கீழ் சந்தாங்கேணி மைதானத்துக்கு 450மில்லியன்  ரூபாய்களும் சாய்ந்தமருது மைதானத்தை தேசிய விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வதுடன் மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் நற்பட்டிமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கிராமிய பாதைகளை அமைப்பதற்க்கு 2000000.00 ரூபாய்களை பிரதமர் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் உலக வங்கியின் உதவியுடன் பெரிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இன ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப்பகுதிகளும் சமனான முறையில் அபிவிருத்திகள் செய்யப்படும் என்று தெரிவித்த ஹரீஸ்,தேசிய ஒருமைப்பாட்டு  120 மில்லியன் ரூபாய்கள் செலவில் மருதமுனை முதல் மாளிகைக்காடு வரை வீதிகள் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தாங்கள் விரைவில் வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபணத்தினூடாக அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ. பாவாவும் மாநகரசபையின் உயர்மட்ட உத்தியோகத்தர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய