Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ஆத‌ர‌வாள‌ன் வாசலில் நாக்கை தொங்க‌ப்போட்டு கிட‌க்கும் நாய் போல் பார்க்க‌ப்ப‌ட்டான்.


கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளை ஆள‌ப்ப‌டும் வ‌ர்க்க‌ம் என்றும் த‌ம் முன் ம‌ண்டியிட்டு நிற்கும் கூட்ட‌ம் என்றும் முக‌ நூலில் கேவ‌ல‌மாக‌ பேசிய‌ மு. காவின் உய‌ர்பீட‌ உறுப்பின‌ர் ஷ‌பீக் ர‌ஜ‌ப்தீனின் கூற்றை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிப்ப‌துட‌ன் இவ‌ர‌து இத்த‌கைய‌ க‌ருத்துக்கு கார‌ண‌ம் இதே க‌ருத்தில் கிழ‌க்கு ம‌க்க‌ளை கையாளும் ர‌வூப் ஹ‌க்கீமின் ந‌ட‌வ‌டிக்கையே என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.
ஷ‌பீக்கின்  பிர‌தேச‌வாத‌ உரை ப‌ற்றி ஆராயும் க‌ட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ குழு கூட்ட‌த்தின் போது அவ‌ர் கூறிய‌தாவ‌து.

முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ப‌து கிழ‌க்கு மாகாண‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌, முழு இல‌ங்கைக்குமாகும் என்ற் சிந்த‌னையிலேயே கிழ‌க்கு மாகாண‌த்தில் அஷ்ர‌ப் த‌லைமையில் தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌து. அக்க‌ட்சியின் ஆர‌ம்ப‌த்தில் கிழ‌க்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வ‌ளிக்காத‌ நிலையில் ஊவா ம‌க்க‌ளின் செல்வாக்குட‌ன் த‌லை நிமிர்ந்து பின்ன‌ர் கிழ‌க்கிலும் வெற்றி பெற்று அமைச்ச‌ர் அஷ்ர‌ப் மூல‌ம் கிழ‌க்கை விட‌ கிழ‌க்குக்கு வெளியே உள்ள‌ மாகாண‌ங்க‌ள் ந‌ன்மை அடைந்த‌ன‌. இத‌ன் மூல‌ம் கிழ‌க்கை த‌லைமையாக‌ கொண்ட‌ க‌ட்சியின் மூல‌ம் மேற்கிலும் சாதிக்க‌ முடியும் என்ப‌தை அஷ்ர‌ப் காட்டியிருந்தார்.
அத‌ன் பின் ஹ‌க்கீம் த‌லைமை ப‌த‌வியை பெற்ற‌ போது அவ‌ர் க‌ண்டியான் என்றோ, கொழும்பில் வாழ்ப‌வ‌ர் என்றோ கிழ‌க்கு ம‌க்க‌ள் பிர‌தேச‌ வாத‌ம் பார்க்காம‌ல் த‌ம் த‌லைவ‌ராக‌ ஏற்றுக்கொண்ட‌ன‌ர். அது ம‌ட்டும‌ல்லாம‌ல் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தேர்த‌லில் க‌ல்முனை சார்பாக‌ ஹ‌க்கீம் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் போட்டியிட்ட‌ போது சுமார் எண்ப‌தினாயிர‌ம் வாக்குக்க‌ளை அம்ம‌க்க‌ள் அவ‌ருக்கு வ‌ழ‌ங்கின‌ர். க‌ல்முனை முஸ்லிம்க‌ள் த‌மதூர் பிர‌திநிதியையும் தோற்க‌டித்து ஹ‌க்கீமை வெல்ல‌ வைத்த‌ன‌ர். அதேபோல் மாகாண‌ச‌பைத்தேத‌லில் திருகோண‌ம‌லையில் ஹ‌க்கீம் போட்டியிட்ட‌ போது நாற்ப‌தினாயிர‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ வாக்குக‌ளை அம்ம‌க்க‌ள் அளித்த‌ன‌ர்.

ஆனாலும் கிழ‌க்கு ம‌க்க‌ள் இந்த‌ ஹ‌க்கீமினால் ஏதேனும் உரிமைக‌ளை பெற்றார்க‌ளா? இல்ல‌வே இல்லை. மாறாக‌ அவ‌ர்க‌ள் ம‌துவுக்கும் மாதுவுக்கும் சூதுக்கும் ப‌த‌விக்கும் விற்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
மு. கா க‌ட்சியின் உய‌ர் பீட‌த்தில் இருந்த‌ கிழ‌க்கு மாகாண‌த்த‌வ‌ர்க‌ளின் செல்வாக்கு குறைக்க‌ப்ப‌ட்டு ஷ‌பீக் ர‌ஜாப்தீன் போன்ற‌ பிர‌தேச‌வாத‌, உய‌ர்வ‌ர்க்க‌ சிந்த‌னை கொண்ட‌ தென்னில‌ங்கையின‌ர் அதிக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

எம‌து நிதியினாலும் இர‌த்த‌ங்க‌ளினாலும் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ மு. காவின் த‌லைமைய‌க‌மான‌ தாருஸ்ஸ‌லாம் போக்கிரிக‌ளின் அமைவிட‌மாக‌ மாறிய‌துட‌ன் ப‌ல‌ கோடி ஊழ‌ல்க‌ளுக்கும் ஆட்ப‌ட்ட‌து.

அங்கு செல்லும் கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ஆத‌ர‌வாள‌ன் வாசலில் நாக்கை தொங்க‌ப்போட்டு கிட‌க்கும் நாய் போல் பார்க்க‌ப்ப‌ட்டான். அமைச்ச‌ர் ஹ‌க்கீமை ச‌ந்திக்க‌ செல்லும் சாதார‌ண‌ கிழ‌க்கான் அங்கு அவ‌மான‌ப்ப‌டாம‌ல் திரும்பிய‌தில்லை. இது ப‌ற்றி என்னிட‌ம் ப‌ல‌ரும் முறையிட்டு இவ‌ற்றை க‌ண்டிக்கும் ப‌டி சொல்லியுள்ள‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஹ‌க்கீமின் கிழ‌க்கு ம‌க்க‌ளை த‌ம் அடிமையாக‌ க‌ருதும் போக்கினாலேயே ஷ‌பீக்கும் இவ்வாறு பேசியுள்ளார். இத்த‌கைய‌ பிர‌தேச‌ வாத‌ வெறிகொண்ட‌ ஏமாற்றுக் க‌ட்சி இன்ன‌மும் தேவையா என்ப‌தை வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் சிந்திக்க‌ வேண்டும்.
ஷ‌பீக்கின் இத்த‌கைய‌ பேச்சுக்காக‌ அவ‌ரது ப‌த‌வியை ராஜினாமா செய்ய‌ வைத்து அவ‌ரின் இட‌த்துக்கு இன்னுமொரு மேலாதிக்க‌ சிந்த‌னை கொண்ட‌, கிழ‌க்கு அல்லாத‌ ஒருவ‌ரே ஹ‌க்கீமால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
இத‌ன் மூல‌ம் கிழ‌க்கான் இத்த‌கைய‌ ப‌த‌விக‌ளுக்கு த‌குதிய‌ற்ற‌வ‌ன் என்ற‌ ஷ‌பீக்கின் க‌ருத்தை ஹ‌க்கீம் ஆமோதித்துள்ளார்.

 தேர்த‌ல் முடிந்த‌ பின் ஷ‌பீக் வேறொரு ப‌த‌விக்கு நிச்ச‌ய‌ம் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு கிழ‌க்கான் ஏமாந்த‌ சோன‌கிரி என்ப‌தை நிரூபிப்பார்க‌ள்.

ஆக‌வே க‌ட்சிக்காக‌ எந்த‌ மாகாண‌ ம‌க்க‌ள் அதிக‌ வாக்க‌ளித்துள்ள‌ன‌ரோ அந்த‌ ம‌க்க‌ளுக்கே க‌ட்சிக்கு கிடைத்த‌ க‌னீம‌த்துக‌ள் எனும் ப‌த‌விக‌ள் அதிக‌மாய் ப‌ங்கு வைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இதுதான் ந‌பிய‌வ‌ர்க‌ளின் வ‌ழி காட்ட‌லுமாகும்.
இவ்வாறு செய்யாம‌ல் கிழ‌க்கு ம‌க்க‌ளின் வாக்குக‌ள் பெற்று ஆளாகிவிட்டு அம்ம‌க்க‌ளை கேவ‌ல‌மாக‌ ந‌ட‌த்தும் ஹ‌க்கீமையும் முஸ்லிம் காங்கிர‌சையும் ம‌க்க‌ள் புற‌க்க‌ணிப்ப‌த‌ன் மூல‌மே இவ‌ர்க‌ளுக்கான‌ த‌ண்ட‌னையை வ‌ழ‌ங்க‌ முடியும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய