ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
முஸ்லிம்கள் செறிந்து வாழும் மல்வானை பிரதேசத்திற்கு, மாகாண சபைகள்
மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா (14) ஞாயிற்றுக்கிழமை விஜயம்
மேற்கொண்டு, குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப்
பணிகளை அமைச்சு அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார். இதன்போது, மல்வானை -
தல்கல, காதிரிய்யா தக்கியாப் பெரிய பள்ளிவாசலுக்கும் சென்று,
காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷேஹ்
அஹமட் பின் முஹம்மது ஆலிம் (காதிரிய்யதுன் நபவி) மற்றும் தக்கியாவின்
நிர்வாகிகள், தரீக்காவின் (இஹ்வான்கள்) சகோதரர்களையும் சந்தித்து
கலந்துரையாடினார். குறித்த தக்கியாவின் பாதை மற்றும் வடிகான்கள்
புனரமைப்புப் பணிகள் தொடர்பில் அமைச்சரிடம் இதன்போது ஆன்மீகத் தலைவரினால்
கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அவற்றை முன்னாள் பியகம பிரதேச சபை
உறுப்பினரும், ஸ்ரீல.சு.க. அபேட்சகருமான ஏ.சீ.எச்.எம். அன்வர் ஊடாக நிதி
ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டு, விரைவில் இப் பணிகளை முழுமையாகப்
பூர்த்தி செய்து தருவதாகவும் அமைச்சர் ஆன்மீகத் தலைவரிடம்
உறுதியளித்தார்.
Comments
Post a comment