அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாரை மாவட்ட வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்று அம்பாரை மொன்ட்டி ஹோட்டலில் நடை பெற்றது. முன்னூறுக்கும் அதிகமான வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்து இம்மாநாடு காலை 10.30 முதல் மாலை 3.30 வரை நடை பெற்றது.
இதில் பிரதம அதிதியாக அ.இ. ம. காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். அத்துடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, பிரதி அமைச்சர் அமீர் அலி, வி. சி இஸ்மாயில், ஜவாத் அப்துல் ரஸ்ஸாக், அ.இ. மக்கள் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, கட்சியின் செயலாளர் ஸுபைதீன் ஹாஜி, கட்சியின் பிரதி தலைவர் ஜமீல், மௌலவி ஹனீபா மதனி, ஸரூக் காரியப்பர், சட்டத்தரணி நிசார், எஸ் எஸ் பி மஜீத், அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அன்சில், நிந்தவூர் தவிசாளர், பெஸ்டர் ரியாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
அ.இ. ம. காங்கிரசின் வரலாற்றில் இக்கூட்டம் மிகப்பெரிய வெற்றி வரலாறாக கணிக்கப்படுகிறது.
- தகவல். முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment