ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பொதுக் கூட்டம் இம்மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை ஸாஹிராக் கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் 2009 க.பொ.த. சாதாரன தர பரீட்சை மற்றும் 2012 க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் ஒன்றியமான 79ஆவது பழைய மாணவர் சங்கம் பாடசாலை மட்டத்திலும், சமூக மட்டத்திலும் ஏராளமான பணிகளை ஆற்றி வருகின்றது. இந்நிலையில், அதன் அடுத்த இரண்டு வருடத்துக்கான நிர்வாகத் தெரிவு மற்றும் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றது. மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள சகோதரர் அஐமன் சலாம் 0777648426, மொஹமட் இஹ்திஷாம் 0773511242 மற்றும் மப்ராஸ் மல்ஹர் 0777409091 ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a comment